தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வேகமெடுக்கும் கொரோனா தொற்று – அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு சிறிய அளவில் அதிகரித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா நோய் பரவல் கட்டுக்குள் வர தொடங்கியது. இதன் காரணமாக மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனால் பொது இடங்களிலும், கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இதன் விளைவாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த தகவல் மாநில மக்களை சற்று அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்துக்கு புதிய கட்டுப்பாடு – டெல்டா பரவல் எதிரொலி!
தற்போது இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, தற்போதைய தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கை, தடுப்பூசி கொள்முதல் என அனைத்தையும் துரிதமாக செய்துள்ளது. தமிழகத்தில் தஞ்சாவூர், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சிறிய அளவில் அதிகரித்துள்ளது. அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்கள் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறது.
TN Job “FB
Group” Join Now
அதேபோல் தொற்று சிறிது அதிகரித்து வரும் மாவட்டங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை தமிழகத்திற்கு 1 கோடியே 56 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில் ஒரு கோடியே 48 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போது கையிருப்பில் இரண்டு, மூன்று நாட்களுக்கு போதுமான அளவில் தடுப்பூசி உள்ளது என்றும் நேற்று ஒரே நாளில் 8 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசி தமிழகத்திற்கு வந்துள்ளது என்றும் அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.