இந்தியாவில் ஒரே நாளில் 1.26 லட்சம் பேருக்கு கொரோனா – சுகாதாரத்துறை தகவல்!!
நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக வீசி வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் சுமார் 1,26,789 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்று:
இந்தியாவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளும் நாட்டில் பின்பற்றப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
TN Job “FB
Group” Join Now
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனாவால் 1,29,789 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,29,28,579 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 685 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,66,862 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் அதிகரிப்பு – மாநகராட்சி திட்டம்!!
நேற்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 59,258 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,18,51,393 ஆக உயர்ந்துள்ளது. தற்போது நாட்டில் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 9,10,319 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை நாட்டில் 9,01,98,673 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 91.67%, உயிரிழப்பு விகிதம் 1.29% மற்றும் சிகிச்சை பெறுபவர்கள் விகிதம் 1.29% ஆக உள்ளது.