விஞ்ஞானிகள் எச்சரிக்கையை மீறி ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம் – அச்சத்தில் மக்கள் !
பிரிட்டனில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளையும் அந்நாட்டு அரசு இன்றுடன் (19.07.2021) தளர்த்தியுள்ளது. பிரிட்டனில் ஒரு நாளுக்கு 50,000 பேர் பாதிக்கப்படுகின்றனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
கட்டுப்பாடுகள் நீக்கம் :
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமெடுத்து வருகிறது. முதல் அலையை விட இரண்டாம் அலை எதிர்பாராத அளவு பாதிப்புகள் உயர்ந்துள்ளது. வளர்ந்த நாடுகளும் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். அனைத்து நாட்டு அரசுகளும் தடுப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். ஊரடங்குகளையும் கட்டுப்பாடுகளையும் அதிகரித்து தொற்றை கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர். தற்போது டெல்டா வைரஸ் அதிகளவு பரவி வருகிறது இது அதிக வீரியத்துடன் பரவி பாதிப்புகளை ஏற்படுத்துவதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
படிப்பை முடித்தவுடன் உடனடி வேலைவாய்ப்பு – நர்சிங் படிப்புகள் குறித்த தகவல்கள்!!
இந்த நிலையில் மூன்றாம் அலை கொரோனா வைரஸ் பரவும் என்ற எச்சரிக்கையும் விடுக்கபட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகள் அனைத்து நாடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்த முடிக்கவில்லை, அதனால் வைரஸ் பரவல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மற்ற நாடுகளை தொடர்ந்து பிரிட்டனில் டெல்டா வகை வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் பிரிட்டன் அரசு அனைத்து கட்டுப்பாடுகளையும் இன்று தளர்த்தியுள்ளது.
TN Job “FB
Group” Join Now
விஞ்ஞானிகள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோர் பிரிட்டனின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஊரடங்கு தளர்வுகளால் நோய் பரவும் வாய்ப்பு அதிகமாகும் என்று கூறியபோது பிரிட்டன் அரசு அவர்கள் கோரிக்கையை புறக்கணித்து இரவு நேர விடுதிகளை மீண்டும் திறக்கவும், எந்த வித கட்டுப்பாடுகளின்றி திரையரங்கு உள்ளிட்டவற்றை திறக்கவும் நேற்று இரவு முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பிரிட்டனில் ஒரு நாளுக்கு 50,000 பேர் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.