தமிழகத்தில் கடைகள் திறந்திருக்கும் நேரம் மாற்றம் – வணிகர் சங்கத்தினர் கோரிக்கை!!

5
தமிழகத்தில் கடைகள் திறந்திருக்கும் நேரம் மாற்றம் - வணிகர் சங்கத்தினர் கோரிக்கை!!
தமிழகத்தில் கடைகள் திறந்திருக்கும் நேரம் மாற்றம் - வணிகர் சங்கத்தினர் கோரிக்கை!!
தமிழகத்தில் கடைகள் திறந்திருக்கும் நேரம் மாற்றம் – வணிகர் சங்கத்தினர் கோரிக்கை!!

தமிழகத்தில் கடைகள் திறக்கும் நேரத்தை மாற்றம் செய்து அதிகரிக்க கோரி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா முதல்வரின் தனிச்செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வணிகர்கள் கோரிக்கை :

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் 14 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நோய்த்தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு மே 10 முதல் 24ம் தேதி வரை இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்தது. இதன் படி அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி காலை 10 மணி வரை கடைகள் திறக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

மேலும் மக்கள் கொரோனா பரவல் அச்சமின்றி ஊரடங்கை பொருட்படுத்தாமல் நடமாடுவதை காண முடிந்தது. மேலும் கடைகளுக்கு செல்வதாக காரணங்களை கூறி வந்தனர். இதனால் கடுமையான ஊரடங்கை அமல்படுத்தும்படி பலரும் கோரிக்கை விடுத்தனர் . இதனை ஆராய்ந்த அரசு மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரித்தது. கடுமையான ஊரடங்கால் மட்டுமே தற்போது பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

முழு ஊரடங்கு மே 25 வரை நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி விற்பனை செய்யும் கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது 10 மணி வரை மட்டுமே கடைகளை திறப்பதால், வியாபாரம் குறைவாக நடப்பதாக வியாபாரிகள் கூறி வருகின்றனர். கடைகள் திறந்திருக்கும் நேரத்தை காலை 8 மணி முதல் 12 வரை என மாற்ற வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா முதல்வரின் தனிச்செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

5 COMMENTS

  1. People in general may need vegetables only in the morning. So there is not much scope in change of time. However restrictions can be planned in such a way to open shops during those restricted timings in the morning, whatever it may be, but areas may be restricted. This is possible by way of closing the different areas at different times.

  2. இறைச்சி கடைகளில்தான் மிக அதிக கூட்டம் கூடுவதால் டாஸ்மாக்போல அதை மட்டுமாவது முழுவதுமாக பதினைந்து நாட்களுக்கு மூடலாம்.

    • இறைச்சியை சாப்பிடாவிட்டால் செத்து விடுவார்கள். மேலும் இவர்கள் இறைச்சி கடையில் கூட்டமாக நின்று சமூக இடைவெளி இல்லாமல் கொரானாவை பரப்பி விடுகிறார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!