தமிழகத்தில் மறுகாவல் நிலைய எல்லைக்குள் செல்ல இ-பதிவு கட்டாயம் – காவல்துறை அறிவிப்பு!!

1
தமிழகத்தில் மறுகாவல் நிலைய எல்லைக்குள் செல்ல இ-பதிவு கட்டாயம் - காவல்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் மறுகாவல் நிலைய எல்லைக்குள் செல்ல இ-பதிவு கட்டாயம் - காவல்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் மறுகாவல் நிலைய எல்லைக்குள் செல்ல இ-பதிவு கட்டாயம் – காவல்துறை அறிவிப்பு!!

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்காக வெளியில் செல்வதற்கு இ-பதிவு முறையை அமல்படுத்திய நிலையில் சென்னை காவல் துறை இது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

காவல்துறை அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும் காரணத்தால் கடந்த மே 10 முதல் மே 24ம் தேதி வரை 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தொற்று பரவல் மேலும் அதிகரித்துள்ளதால் ஊரடங்கு கட்டுப்டுகள் மேலும் நீட்டிக்க வாய்ப்புள்ளது. ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் புதிதாக 31,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் அவசர தேவைக்காக வெளியில் செல்வதற்கு தமிழக அரசின் இ-பதிவு முறையை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடைகள் திறந்திருக்கும் நேரம் மாற்றம் – வணிகர் சங்கத்தினர் கோரிக்கை!!

மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு இ – பாஸ் பதிவு செய்து அதற்கு காவல் துறையின் ஒப்புதல் பெற்று அதன் ஆவணத்தை வைத்துக் கொண்டு தான் பயணிக்க முடியும். தமிழகத்திற்குள் உள்ள மாவட்டங்களுக்கு இடையிலும், மாவட்டத்திற்கு உள்ளும் செல்வதற்கு இ – பதிவு செய்தலே போதுமானது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அரசு அனுமதி அளித்துள்ள காலை 6 மணி முதல் காலை 10 மணி வரையிலான நேரங்களை தவிர்த்து வெளியில் வருபவர்கள் கண்டிப்பாக இ- பதிவு பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

மேலும், பொதுமக்கள் தங்கள் சரகத்திலிருந்து மறு காவல் நிலைய எல்லைக்குள் செல்லாதவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அப்படியும் தேவையின்றி அடுத்த காவல் நிலைய எல்லைக்குள் செல்பவர்கள் உரிய இ- பதிவு செய்திருக்க வேண்டும். அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் தவிர்க்க முடியாத தேவைகளுக்கு மட்டும் இ-பதிவு இல்லமல் அனுமதிக்கப்படுவார்கள் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Inside Chennai, patients (Heart) should not be penalised for e-pass particularly when they go for checking once in 15 days, 30 days, 60 days, 90 days as they have to meet only the Cardiologist who have given re-birth to them, And hence e-pass between 2 police stations is found to be disgusting. Police should see the medical case file of patients and shpuld bot block. For info if a patient falling under Mylapore Police station residing in Adam Street, to go to Isabella Hospital (does not know which police station Mylapore or Alwarpet) do they require E-Pass? Police Commissioner should guide their personnel suitably.TSM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!