தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா – மருத்துவமனைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

0
தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா - மருத்துவமனைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா - மருத்துவமனைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா – மருத்துவமனைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா நான்காம் அலை பரவத் தொடங்கியதால் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா வார்டுகளை ரெடி செய்யும்படி மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு அறிவித்துள்ளார்.

கொரோனா

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகமாக இருந்தது. அரசின் பல கட்டுப்பாடுகளுக்கு பிறகு கொரோனா தொற்று குறைய ஆரம்பித்தது. இதனால் மக்கள் பல மாதங்களுக்கு பிறகு பொது இடங்களில் நடமாட துவங்கினர். இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது. பழையபடி மீண்டும் பொது இடங்களுக்கு செல்லும்போது மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் என கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாமல் பொது இடங்களுக்கு செல்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? முதல்வர் விரைவில் ஆலோசனை!

ஒவ்வொரு நாளும் கொரோனா பரவலின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் மீண்டும் பழையபடி மருத்துவமனையில் கொரோனா வார்டுகளை ரெடி செய்து கொண்டிருக்கின்றனர். மேலும், அரசு மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகளில் கொரோனா வார்டுகளை விரைவில் ரெடி செய்யும்படி மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு அறிவித்துள்ளார். தமிழகத்தில் மட்டுமல்லாமல் வட மாநிலங்களிலும் கொரோனா பரவல் தாறுமாறாக உயர்ந்து கொண்டிருக்கிறது.

ExamsDaily Mobile App Download

மேலும், மருத்துவமனைகளில் படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள், ஆக்ஸிஜன் வசதிகள், மருந்து, மாத்திரைகள் என அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரி வளாகத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், தடுப்பூசி போடாதவர்கள் விரைவில் போட்டுக்கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையில் பணியாற்றி வரும் செவிலியர்கள் கட்டாயமாக இரண்டு தவணை தடுப்பூசியையும் போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுளள்து.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here