‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி வீட்டில் நடந்த விசேஷம் – பிறந்தநாள் கொண்டாட்டம்! வைரலாகும் வீடியோ!

0
'குக் வித் கோமாளி' ஷிவாங்கி வீட்டில் நடந்த விசேஷம் - பிறந்தநாள் கொண்டாட்டம்! வைரலாகும் வீடியோ!
'குக் வித் கோமாளி' ஷிவாங்கி வீட்டில் நடந்த விசேஷம் - பிறந்தநாள் கொண்டாட்டம்! வைரலாகும் வீடியோ!
‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி வீட்டில் நடந்த விசேஷம் – பிறந்தநாள் கொண்டாட்டம்! வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ நட்சத்திரம் ஷிவாங்கி சமீபத்தில் தனது 22வது பிறந்தநாளை கொண்டாடி இருந்த நிலையில் இந்த விழா தொடர்பான வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட அது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

நடிகை ஷிவாங்கி:

தமிழ் சின்னத்திரையின் ரியாலிட்டி நிகழ்ச்சியில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து வரும் ஒரு ஷோ ‘குக் வித் கோமாளி’. விஜய் டிவியில் கடந்த 2 சீசன்களாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் இருந்து ஏகப்பட்ட வரவேற்புகளை பெற்று வரும் இந்த ஷோவில் 3வது சீசனாக கோமாளியாக கலந்து கொண்டு வருபவர் ஷிவாங்கி. முன்னதாக, விஜய் டிவியில் ‘சூப்பர் சிங்கர்’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பாடகியாக அறிமுகமாகி, ‘குக் வித் கோமாளி’ மூலம் கோமாளியாக இப்போது மக்களை கவர்ந்து வருகிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்த திருப்பம் – திடீரென கர்ப்பமாகும் ஐஸ்வர்யா!

இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக அறிமுகமாகி இருக்கிறார் ஷிவாங்கி. இவரது அப்பாவித்தனமான பேச்சுக்கும், குழந்தைத் தனமான செயலுக்கும் பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இப்போது திரைப்படம், ரியாலிட்டி நிகழ்ச்சி என பிசியாக வலம் வந்துகொண்டிருக்கும் ஷிவாங்கி சமீபத்தில் தனது 22வது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். இவரது பிறந்தநாள் தொடர்பான புகைப்படங்கள் அப்போது இன்ஸ்டா பக்கத்தில் வெளியாக அவருக்கு ஏகப்பட்ட வாழ்த்துக்கள் குவிந்தது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் ஷிவாங்கியின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில், ஷிவாங்கி தனது 22வது பிறந்தநாளை குடும்பத்தாருடன் சேர்ந்து உற்சாகமாக கொண்டாடி இருக்கிறார். இது தொடர்பாக வெளியான வீடியோவில் பிறந்தநாள் கேக் வெட்டும் ஷிவாங்கி, வழக்கம் போல குறும்புத்தனங்களை செய்துள்ள காட்சிகளும் இடம்பெற்று ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!