விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் டாக்டர் பகத் ஆக மாறிய மணிமேகலை – ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' சீசன் 3ல் டாக்டர் பகத் ஆக மாறிய மணிமேகலை - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' சீசன் 3ல் டாக்டர் பகத் ஆக மாறிய மணிமேகலை - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் டாக்டர் பகத் ஆக மாறிய மணிமேகலை – ரசிகர்கள் உற்சாகம்!

தற்போது புதிய சீசனுடன் மீண்டும் துவங்கி இருக்கும் ‘குக் வித் கோமாளி’ ஷோவில், கோமாளி மணிமேகலை ‘டாக்டர்’ திரைப்படத்தில் வரும் ரெடிங் கிங்ஸ்லியின் பகத் கதாப்பாத்திரத்தை பிரதிபலிக்க இது சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களிடம் இருந்து வரவேற்புகளை பெற்று வருகிறது.

குக் வித் கோமாளி

ஒவ்வொரு வாரமும் புத்தம் புதிய எபிசோடுகளுடன், அட்டகாசமான கெட்டப்பில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ ரியாலிட்டி நிகழ்ச்சி வழக்கம் போல மக்களின் வரவேற்புகளை பெற்று வருகிறது. அந்த வகையில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 துவங்கி 2 வாரங்கள் கழித்து, முதல் நேருக்கு நேர் சுற்று போட்டி கடந்த வாரத்தில் நடைபெற்றது. இந்த எபிசோடில் புகழ் கோமாளியாக கலந்து கொண்டிருந்தார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் பார்மேட் படி, முதலில் கோமாளிக்கான பேரிங் உடன் மெயின் டாஸ்க்கில் ஸ்வாரசியமான தடை ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது.

மறுஉத்தரவு வரும் வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி அறிவிப்பு!

இந்த ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 ஷோவின் பேரிங் பகுதியில் சந்தோஷ், கோமாளியை செலெக்ட் செய்யும் போது பரத் அல்லது பாலா வேண்டும் என்று சொல்லவும், போன எபிசோடில் அவருடன் கோமாளியாக வந்த மணிமேகலை ‘எப்படி உங்கள் அப்பா அம்மா உனக்கு வைச்ச பெற விட நான் புது பெயர் ஒன்றை வைத்து, உங்களை பிரபலமாக்கி, உன் கூட சமைத்து, ஜெயிக்க வைக்க இப்போது வந்து பரத் வேண்டும், பாலா வேண்டும் என்று சொல்லுகிறாய். என்னை பார்த்தால் எப்படி இருக்கு என்று’ ரெடிங் கிங்ஸ்லி பாணியில் பேசி எக்கச்சக்கமான கிளாப்ஸ்களை அள்ளி இருக்கிறார்.

TCS நிறுவனத்தில் மாதம் ரூ.58,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – முழு விபரம் இதோ!

அதே போல ராகுல் தாத்தாவுடன் சேர்ந்து பாலா மற்றும் புகழ் இருவரும் நகைச்சுவை செய்ய, ‘மாநாடு’ சிம்பு கெட்டப்பில் மூக்குத்தி முருகன் வர மொத்த ‘குக் வித் கோமாளி’ செட்டும் கலகலப்பாகியது. தொடர்ந்து வித்யூலேகாவிற்கு கோமாளியாக ‘சார்பட்டா பரம்பரை’ டான்சிங் ரோஸ் கெட்டப்பில் சக்தி வர, அத்திரைப்படத்தில் நடித்திருந்த சந்தோஷ் மற்றும் சக்தி இருவரும் குத்து சண்டை போட்டது பார்வையாளர்களை கவர்ந்திருந்தது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!