தமிழகத்தில் ஆன்லைன் மோசடி குறித்த புகார்கள் – இலவச தொலைபேசி எண் அறிமுகம்!

0
தமிழகத்தில் ஆன்லைன் மோசடி குறித்த புகார்கள் - இலவச தொலைபேசி எண் அறிமுகம்!
தமிழகத்தில் ஆன்லைன் மோசடி குறித்த புகார்கள் - இலவச தொலைபேசி எண் அறிமுகம்!

தமிழகத்தில் ஆன்லைன் மோசடி குறித்த புகார்கள் – இலவச தொலைபேசி எண் அறிமுகம்!

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் அதன் மூலம் செய்யப்படும் ஆன்லைன் மோசடியும் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஆன்லைன் மோசடி குறித்து புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்ணை சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் மோசடி:

மக்கள் அதிகம் ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்த தொடங்கிய நிலையில் அதன் மூலம் ஆன்லைன் மோசடியும் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. மக்கள் வங்கி சேவைகளை போனில் செய்ய தொடங்கி விட்ட நிலையில் அதெல்லாம் மக்களுக்கு எளிமையான ஒன்றாக இருந்தாலும் அதன் மூலம் ஆபத்து அதிகமாக இருக்கிறது. உங்களது மொபைல் எண்ணிற்கு போன் செய்து வங்கி விவரங்களை கேட்பார்கள் நீங்கள் தெரியாமல் உங்களுடைய விவரங்களை சொன்னால் உங்களது வங்கி கணக்கில் உள்ள பணம் திருடப்படும்.

Exams Daily Mobile App Download

வங்கி கணக்கில் பாதுகாப்பாக இருக்கும் பணம் திருடப்படும் செய்தி அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் ஆன்லைன் மோசடியை தடுக்கவும், அதில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மேலும் திருடப்பட்ட பணத்தை மீட்டு தரவும், சென்னை மாநகர போலீசார் சார்பில் அந்தந்த காவல் மாவட்டங்களில் சைபர் கிரைம் போலீஸ் பிரிவு துவங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரிவில் புகார் அளிக்க 1930 என்ற இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் அளிக்கப்படும் புகார்களை சைபர் கிரைம் போலீசார் விசாரித்து அதில் ஈடுபடும் நபர்களை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்கின்றனர்.

இந்தியாவில் விதிக்கப்படும் சுங்க கட்டணத்தில் சலுகை – ஒன்றிய அரசு அறிவிப்பு!

மேலும் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்து வருகின்றனர். அதன் படி ஆன்லைன் மூலம் ஒருவரின் பாஸ்வேர்ட்ஸ் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் கிடைக்கும் போது எளிமையாக பணம் திருடுகின்றனர். பணம் திருடப்பட்டதும் மக்கள் என்ன செய்வது என தெரியாமல் வருத்தப்பட்டு அதை அப்படியே விட்டு விடுகின்றனர். இந்நிலையில் மக்கள் இழந்த பணத்தை மீண்டும் பெற முடியும் என அறிந்து கொள்ள வேண்டும். ஒருவர் பாதிக்கப்பட்டதும் உடனே 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஆன்லைன் மோசடி குறித்து புகார் அளித்தால் அவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!