இறப்பு காட்சியில் நடித்த லட்சுமி அம்மாவிற்கு பரிகாரம்? – புதிய சர்ச்சை!

0
இறப்பு காட்சியில் நடித்த லட்சுமி அம்மாவிற்கு பரிகாரம்? - புதிய சர்ச்சை!
இறப்பு காட்சியில் நடித்த லட்சுமி அம்மாவிற்கு பரிகாரம்? - புதிய சர்ச்சை!
இறப்பு காட்சியில் நடித்த லட்சுமி அம்மாவிற்கு பரிகாரம்? – புதிய சர்ச்சை!

பாண்டியன் ஸ்டார் தொடரில் லட்சுமி அம்மாவாக நடித்த ஷீலா சமீபத்தில் இறந்தது போல் காட்சிகள் படமாக்கப்பட்டதால் பரிகாரம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகின்றது.

பரிகார விவகாரம்:

தற்போதைய காலகட்டத்தில் கூட்டுக் குடும்பமாக இருப்பது என்பது மிகவும் அரிதாகி விட்டது. நமது வாழ்கை முறை மாறியதும் இதற்கு முக்கிய காரணமாகும். இதனால் கூட்டுக் குடும்ப கதைகள் திரைத்துறையில் ஆல் கிளாஸ் ரசிகர்களையும் பெற்று விடும். அதற்கு பல உதாரணங்கள் உள்ளது. அந்த வகையில் அண்ணன், தம்பியாக ஒன்றாக பிறந்த 4 பேரை சுற்றி நடக்கும் கதை தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியின் ஆஸ்தான தொடராக ஒளிபரப்பாகிறது. தொடர் ஆரம்பத்தில் இருந்து படு சுவாரஸ்யமாக சென்றது. குடும்ப பாசத்தை மிகவும் எதார்த்தமாக சொல்வதால் அதிக எதிர்பார்ப்பையும் பெற்றுள்ளது.

செம்பருத்தி சீரியல்ல இனி பழைய ஆதி வர்றாரா? – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

இந்நிலையில், இந்த தொடரில் அம்மாவாக லட்சுமி அம்மா கதாபாத்திரத்தில் நடித்த ஷீலா அவர்கள் தொடரில் உடல்நலக் குறைவு காரணமாக திடீரென்று இறந்து விட்டதாக காட்சிகள் வந்தது. அவரது இளைய மகன் கண்ணன் வீட்டினர் யாருக்கும் தெரியாமல் காதல் திருமணம் செய்து விடுவார். இதனால் தான் லட்சுமி அம்மாவிற்கு உடல்நலமில்லாமல் போனதாக சொல்லப்பட்டது. இதே கவலையில் அவர் இறந்து விடுவதாக காட்சிகள் ஒளிபரப்பாகியது. இந்த சீன்கள் கிட்டத்தட்ட ஒருவாரமாக ஒளிபரப்பட்டது. காட்சிகள் அந்த அளவிற்கு விளக்கமாக எடுக்கப்பட்டது. இதற்காக, நடிகை ஷீலா இறந்தவர்களுக்கு செய்யப்படும் அனைத்து சடங்குகளிலும் தத்ரூபமாக நடித்திருந்தார்.

பிரிட்டன் பயணிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்தல் – மத்திய அரசு முடிவு !

காட்சிகள் பார்க்கும் அனைவரையும் கண்கலங்க வைக்கும் படி இருந்தது. பொதுவாக, சினிமா மற்றும் சீரியல்களில் இறப்பது போன்ற காட்சிகளில் நடிப்பவர்களுக்கு எப்போதுமே திருஷ்டி கழித்து விட்டு வீட்டிற்கு அனுப்புவது வழக்கம். இதற்காக, நடிகை ஷீலாவிற்கு பூசணிக்காய், எலுமிச்சை மற்றும் தேங்காய் உள்ளிட்டவற்றில் சூடம் கொளுத்தி அவற்றை சுற்றி திருஷ்டி கழிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், சோகமான சீன்களில் நடித்தவர்கள் மீண்டும் சிரித்து கொண்டே வருவது போல காட்சி எடுப்பது வழக்கம். இதற்காக மீண்டும் லட்சுமி அம்மா நன்றாக சிரித்த படி தனது மருமகள் தனத்தின் கனவில் வருவது போலவும் காட்சிகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!