புதிதாக 10,000 வேலைவாய்ப்புகள் அளிக்கும் நிறுவனங்கள் – பட்டதாரிகளுக்கு ஜாக்பாட் வாய்ப்பு!

0
புதிதாக 10,000 வேலைவாய்ப்புகள் அளிக்கும் நிறுவனங்கள் - பட்டதாரிகளுக்கு ஜாக்பாட் வாய்ப்பு!
புதிதாக 10,000 வேலைவாய்ப்புகள் அளிக்கும் நிறுவனங்கள் - பட்டதாரிகளுக்கு ஜாக்பாட் வாய்ப்பு!
புதிதாக 10,000 வேலைவாய்ப்புகள் அளிக்கும் நிறுவனங்கள் – பட்டதாரிகளுக்கு ஜாக்பாட் வாய்ப்பு!

படித்த இளைஞர்கள் தற்போதைய நிலையில் வேலைவாய்ப்புகளை தேடி அலைந்து கொண்டிருக்கும் நிலையில், 4 முக்கிய ஆலோசனை மற்றும் தொழில்முறை சேவை நிறுவனங்கள் புதிதாக 10,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்புகள்:

McKinsey, BCG, EY, PwC மற்றும் Deloitte போன்ற ஆலோசனை மற்றும் தொழில்முறை சேவை நிறுவனங்கள் இந்த ஆண்டு இந்தியாவில் தங்கள் ஊழியர்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. EY நிறுவனம் தனது இந்திய வணிகம் மற்றும் உலகளாவிய விநியோக சேவைகளுக்காக பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரிகளில் இருந்து சுமார் 10,000 இளைஞர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இதேபோல், BCG நிறுவனமும் அதிக அளவில் வேலை வாய்ப்பை வழங்க திட்டமிட்டுள்ளது.

மேலும், McKinsey நிறுவனம் அதிக அளவில் அதன் வாடிக்கையாளர்களை கொண்டிருப்பதால், அவர்களின் திறனை வளர்த்துக் கொள்ள அடுத்த ஐந்தாண்டுகளில் 10,000 பேரை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், வணிக ரீதியாக இந்திய அளவிலும், உலக அளவிலும் நல்ல வளர்ச்சியை அடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் முடிவுக்கு வரும் ஆன்லைன் சூதாட்டம் – அரசின் அவசர சட்டம்!

Exams Daily Mobile App Download

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் பட்சத்தில் நடப்பு ஆண்டில் அதிக அளவில் புதிய பணியாளர்களை நியமிக்க உள்ளதாக இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில நாட்களில் உலக அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற கூறப்பட்டு வரும் நிலையில் இந்த நான்கு நிறுவனங்கள் இவ்வாறு அறிவித்துள்ளது இளைஞர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!