ஒரே நாளில் இரண்டு ஜாக்பாட் – குஷியில் தேனி மாவட்ட மக்கள்!  

0
ஒரே நாளில் இரண்டு ஜாக்பாட் - குஷியில் தேனி மாவட்ட மக்கள்!  

தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த தகவல் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஜாக்பாட்:

தேனி மாவட்ட அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் வருகின்ற சனிக்கிழமை (10.02.2024) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள் இருவேறு இடங்களில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது தமிழக அரசின் முன்னோடி திட்டமான ‘வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது” இரண்டு வாரங்களில் 30 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மார்க்கெட்டிங், பிராண்டிங், சந்தை இணைப்புகள், ஏற்றுமதி, இறக்குமதி தர நிலைப்படுத்துதல் போன்ற பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் “மகளிர் தொழில் முனைவோர் முகாம்” தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2024

இம்முகாம் 10.02.2024 அன்று தேனி மாவட்ட தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் உழவர் பயிற்சி மையத்தில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் நாளைக்குள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இம்முகாம் குறித்த கூடுதல் தகவலை 9385299717 என்ற எண்ணை தொடர்பு கொண்டு அறியலாம். தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் மூலம் இம்முகாம் நடத்தப்படவுள்ளது. மேலும் இரண்டாவதாக “தனியார் வேலைவாய்ப்பு முகாம்” 10.02.2024 அன்று ஆண்டிபட்டி பாரத் நிகேதன் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமை தேனி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஏற்பாடு செய்துள்ளது. இம்முகாமில் 150-க்கும் மேலான தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ளவுள்ளது. 08ம் / 10ம் / 12ம் வகுப்பு, டிகிரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ, பி.இ முடித்தவர்கள் இம்முகாமில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். https://www.tnprivatejobs.tn.gov.in/Auth/Auth/ca-login என்ற இணைப்பின் மூலம் தங்களது பெயரை பதிவு செய்த நபர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ள இயலும். இம்முகாமிற்கு வரும் நபர்கள் ஆதார் நகல் மற்றும் கல்விச் சான்றிதழ்களின் நகலை உடன் கொண்டு வர வேண்டும்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!