கலர்ஸ் தமிழ் ‘இது சொல்ல மறந்த கதை’ சீரியல் பற்றி ரட்சிதா சொன்ன விளக்கம் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

0
கலர்ஸ் தமிழ் 'இது சொல்ல மறந்த கதை' சீரியல் பற்றி ரட்சிதா சொன்ன விளக்கம் - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
கலர்ஸ் தமிழ் 'இது சொல்ல மறந்த கதை' சீரியல் பற்றி ரட்சிதா சொன்ன விளக்கம் - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
கலர்ஸ் தமிழ் ‘இது சொல்ல மறந்த கதை’ சீரியல் பற்றி ரட்சிதா சொன்ன விளக்கம் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

கலர்ஸ் தமிழ் சேனலில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ‘இது சொல்ல மறந்த கதை’ சீரியல் கதாநாயகி ரட்சிதா மஹாலக்ஷ்மி, இந்த சீரியல் கதையை தேர்வு செய்வதற்கான காரணத்தை பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார். இந்த சீரியலில் அவர் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும் கணவரை இழந்த விதவையாக நடிக்கிறார்.

‘இது சொல்ல மறந்த கதை’ சீரியல்

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் தான் ரட்சிதா மஹாலக்ஷ்மி. அவர் சரவணன் மீனாட்சி தொடர் மூலமாக பிரபலமான நிலையில், சமீபத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் மிர்ச்சி செந்திலிற்கு ஜோடியாக நடித்து வந்தார். ஆனால் சில காரணங்களால் சீரியலை விட்டு அவர் விலகி இருக்கிறார். மேலும் கன்னட படம் ஒன்றில் அவர் நடித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியானது. தற்போது ரட்சிதா கலர்ஸ் தமிழ் சேனலில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ‘இது சொல்ல மறந்த கதை’ சீரியலில் கதாநாயகியாக களமிறங்கி இருக்கிறார்.

ராஜா ராணி 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் மயங்கி விழுந்த புது சந்தியா, அர்ச்சனா – வைரலாகும் வீடியோ!

பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் சீரியல்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருக்கும் நிலையில், இந்த சீரியலில் அவர் சிறு வயதில் கணவரை இழந்த விதவையாக நடித்து இருக்கிறார். மேலும் அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. தனியாக இந்த சமூகத்தில் வாழ அவர் படும் கஷ்டங்களை பற்றி தான் இந்த சீரியல் கதை உணர்த்துகிறது. இந்நிலையில் இந்த கதையை தேர்வு செய்ய என்ன காரணம் என ரட்சிதா மஹாலக்ஷ்மியிடம் கேள்வி கேட்கப்பட்டது.

விரக்தியில் காணாமல் போகும் முல்லை, தேடி கண்டுபிடிக்கும் கதிர் – ரசிகர்களை உருக்கிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!

அதற்கு அவர் இதுக்கு முன்பு இரண்டு ஸ்கிரிப்ட்களை படித்தேன். ஆனால் இந்த ஸ்கிரிப்ட்டில் ஒரு ஸ்பார்க் இருந்தது. சாதனா என்கிற கதாபாத்திரத்துடன் தனிப்பட்ட முறையில் என்னால் தொடர்பு கொள்ள முடிந்தது. காரணம் எனது வீட்டு உதவியாளர் ஒரு விதவை. அவர் தனது குழந்தைகளை படிக்க வைக்க கடினமாக முயற்சி செய்து வருகிறார். நான் அவருடைய காலணியில் என்னை வைத்துக்கொண்டு பார்க்கிறேன். மேலும் என் குணத்தின் ஆழம், அவருடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டேன். பிறகு, எல்லாமே சரியாகிவிட்டன என சொல்லி இருக்கிறார். மேலும் பல ஆண்டுகளாக சினிமாவில் பயணம் செய்து வரும் அவர் மக்களின் மனநிலை மாறிவிட்டது, அவர்கள் சிறந்த கதைகளை விரும்புகிறார்கள். இன்றைய கால கட்டத்தில் பெரிய சமூக ஊடக ஏற்றம் உள்ளது. இன்று, நம் வசதிக்கேற்ப சீரியல்களைப் பார்க்கலாம். எனவே தொலைக்காட்சியில் நல்ல கதைகளைக் கொண்டு வருவது முக்கியம் என சொல்லி இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!