முதல் & 2ம் ஆண்டு மாணவர்களுக்கு விரைவில் கல்லூரிகள் திறப்பு – உயர்கல்வித்துறை பரிசீலனை!!

2
முதல் & 2ம் ஆண்டு மாணவர்களுக்கு விரைவில் கல்லூரிகள் திறப்பு - உயர்கல்வித்துறை பரிசீலனை!!
முதல் & 2ம் ஆண்டு மாணவர்களுக்கு விரைவில் கல்லூரிகள் திறப்பு - உயர்கல்வித்துறை பரிசீலனை!!
முதல் & 2ம் ஆண்டு மாணவர்களுக்கு விரைவில் கல்லூரிகள் திறப்பு – உயர்கல்வித்துறை பரிசீலனை!!

தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் பிற ஆண்டு மாணவர்களுக்கும் விரைந்து கல்லூரிகளை திறக்க உயர்கல்வித்துறை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கல்லூரிகள் திறப்பு:

கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் இறுதிபருவம் தவிர்த்து பிற மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் கல்லூரிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க உயர்கல்வித்துறை முடிவு செய்தது.

மே மாதம் பிளஸ் 2 பொதுத்தேர்வு – தமிழக அரசு பரிசீலனை!!

அதன்படி கடந்த டிசம்பர் 7ம் தேதி முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. மேலும் நேரில் வகுப்புகளில் கலந்து கொள்ள இயலாத மாணவர்கள், ஆன்லைன் கல்வியை தொடரலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் அதிகப்படியான மாணவர்கள் ஆர்வத்துடன் கல்லூரிகளுக்கு வர தொடங்கினர். இதற்கிடையில் இறுதியாண்டு தவிர்த்து பிற மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்படாமல் இருப்பதால் ஆன்லைன் வாயிலாக வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்படுகிறது.

‘ஆன்லைனில்’ அரசுப்பணியாளர் குரூப் தேர்வுகள் – மாநில அரசு திட்டம்!!

தற்போது அந்த மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை தொடங்க அரசு திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் கூறும் போது கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 1, 2 மற்றும் மூன்றாம் ஆண்டு என அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை தொடங்க ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறப்பு – 95% பெற்றோர்கள் சம்மதம்!!

தற்போது உள்ள சுழற்சி வகுப்பு முறைகளை பின்பற்றி பாடங்களை எடுக்க நிபுணர் குழு சார்பில் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதற்கான அனுமதி கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!