தமிழகத்தில் மார்ச் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் மார்ச் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் மார்ச் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் மார்ச் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழகத்தில் வரும் மார்ச் 4ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில், சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நெல்லையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

உள்ளூர் விடுமுறை:

தமிழகத்தில் முக்கிய பண்டிகைகள், திருவிழாக்கள், தியாகிகள் பிறந்த தினம் ஆகியவைகளுக்கு குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம் ஆகும். மேலும் உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மற்றொரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும். அந்த வகையில் வரும் மார்ச் 4 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு அய்யா வைகுண்டர் உதய தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அய்யா வைகுண்டர் தாழ்த்தப்பட்ட இன மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்க கடுமையாக போராடினார்.

தமிழகத்தில் மார்ச் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

அவர் அனைத்து சாதி மக்களையும் ஒன்றிணைக்க, தமிழகத்தில் சாதிக் கொடுமைகளை எதிர்த்து போராடியவர். அதனால் தமிழக மக்கள் அய்யா வைகுண்டரை கடவுளாக வணங்கி வருகின்றனர். மேலும் தமிழகம் முழுவதும் வருடம் தோறும் அய்யா வைகுண்டர் திருநாள் மிக வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து அய்யா வைகுண்டருக்கு கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் கோவில் அமைக்கப்பட்டு உள்ளது. எனவே மார்ச் 4 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் நெல்லையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – இரவு நேர ஊரடங்கு நீக்கம்! அரசு அனுமதி!

இந்த நிலையில் அடுத்த மாதம் பொதுத்தேர்வு மற்றும் முக்கிய தேர்வுகள்கள் நடைபெறுவதாக இருந்தால் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.அதாவது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலக நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர் விடுமுறையானது வங்கிகள் , மாவட்ட அலுவலகங்களுக்கு பொருந்தாது. இந்த விடுமுறையை ஈடு செய்ய 12ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here