தமிழக அரசின் நகைக்கடன் தள்ளுபடி விவரங்கள் சேகரிப்பு – விரைவில் அறிவிப்பு!
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்றவர்களின் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என்ற அரசின் புதிய திட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியது. ஒருவரை மிஞ்சும் அளவில் மற்றொருவர் வாக்குறுதிகளை மக்களிடம் அளித்தனர். இந்நிலையில், திமுக தமிழக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. திமுக தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமைத்ததும் அவர்களின் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதனால் மக்களிடம் நன்மதிப்பை பெற்றும் வருகிறது.
ஆகஸ்ட் 16 வரை 144 தடை உத்தரவு அமல் – இரவு ஊரடங்கு 1 மணிநேரம் நீட்டிப்பு!
இதேபோல், தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களின் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த திட்டம் குறித்து தமிழக அரசு அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. இதனால் எதிர்க்கட்சியினர் இது குறித்து கேள்விகள் எழுப்ப தொடங்கியுள்ளனர். இதனால் இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்தும் முடிவை அரசு எடுத்துள்ளது. இருப்பினும், , நகைக் கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை சில விதிகளின் அடிப்படையில் கணிசமாக குறைப்பதற்கான முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
தமிழகம் முழுக்க கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவற்றில் நகைக் கடன் பெற்றவர்களின் பட்டியல் சேகரிக்கும் பணிகள் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. அதில், 5 பவுன் வரை நகைக் கடன் பெற்றவர்கள், கடன் அடமானமாக வைக்கப்பட்ட நகை 5 பவுனுக்கும் அதிகமான எடை கொண்டதாக இருந்தாலும், 5 பவுன் எடைக்கான கடன் தொகை மட்டுமே கொண்டவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும்.
இந்தியாவில் 39,070 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி – 491 பேர் உயிரிழப்பு!
5 பவுனுக்கும் அதிகமான நகையின் பேரில் பெற்ற கடன் தள்ளுபடி செய்வதற்கான முடிவு அரசின் கையில் உள்ளது. மேலும், நகைக் கடன் பெற்றவரோ, அவரது வாழ்க்கைத் துணையோ அல்லது தாய், தந்தையோ அல்லது மகன், மருமகளோ அரசுப் பணிகளில் இருந்தால் அவர்கள் பெற்ற நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படாது. இது குறித்த அறிவிப்பு வருகின்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ல்லது அதற்கு முன்பாக அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.