சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தற்போது வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள General Manager, Joint General Manager மற்றும் Deputy General Manager ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 30.07.2022 அன்று வரை பெறப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Chennai Metro Rail Limited (CMRL)
பணியின் பெயர் GM, JGM and DM
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் காலிப்பணியிடங்கள்:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் (CMRL) காலியாக உள்ள General Manager, Joint General Manager மற்றும் Deputy General Manager ஆகிய பணிகளுக்கு தலா 01 பணியிடம் வீதம் மொத்தமாக 03 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

CMRL கல்வி தகுதி:
  • General Manager (Planning & Business Development) பணிக்கு AICTE அல்லது UGC-ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Marketing, Finance பாடப்பிரிவில் MBA Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Joint General Manager (Finance & Accounts) பணிக்கு AICTE அல்லது UGC-ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Finance பாடப்பிரிவில் CA அல்லது MBA Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Deputy Manager (Corporate Affairs) பணிக்கு AICTE அல்லது UGC-ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Electrical, Electronics பாடப்பிரிவில் B.E, B.Tech மற்றும் <Marketing பாடப்பிரிவில் MBA Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணி சார்ந்த பிரிவுகளில் 04 வருடம் முதல் 20 வருடம் வரை அனுபவம் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

CMRL வயது விவரம்:
  • General Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 20.07.2022 அன்றைய நாளின் படி, குறைந்த பட்சம் 45 வயது எனவும் அதிகபட்சம் 55 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Joint General Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 20.07.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 43 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Deputy Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 20.07.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 35 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சம்பளம்:
  • GM பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாதந்தோறும் ரூ.2,25,000/- சம்பளமாக பெறுவார்கள்.
  • JGM பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாதந்தோறும் ரூ.1,25,000/- சம்பளமாக பெறுவார்கள்.DM பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாதந்தோறும் ரூ.70,000/- சம்பளமாக பெறுவார்கள்.
  • CMRL தேர்வு செய்யும் விதம்:
  • CMRL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மற்றும் Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்களிடம் ரூ.300/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும்.

மேலும் SC / ST பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களிடம் ரூ.50/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும்.

CMRL விண்ணப்பிக்கும் விதம்:

இந்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி நாளுக்குள் (03.08.2022) வந்து சேருமாறு விரைவு தபால் செய்ய வேண்டும்.

அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:

Additional General Manager (HR),
Chennai Metro Rail Limited CMRL Depot,
Admin Building, Poonamallee High Road, Koyambedu,
Chennai – 600107.

 Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here