12ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கசிவு – தேர்வு ஒத்திவைப்பு!

0
12ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கசிவு - தேர்வு ஒத்திவைப்பு!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு சமயத்தில் வினாத்தாள் கசிவு தொடர்பாக வெளியான தகவல்களால் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு:

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கல்வி வாரியங்கள் செயல்படுவது போலவே உலக தரத்திலான சி ஐ எஸ் சி இ கல்வி வாரியத்தின் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. இவர்களுக்கு தனியான பாடத்திட்டமும், பொதுத்தேர்வு அட்டவணைகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டுக்கான 12-ம் வகுப்பு சி ஐ எஸ் சி இ பொதுத்தேவில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி அன்று வேதியியல் பாடத்தின் வினாத்தாள் கசிந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

ஆயில் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.2,15,000/-

ஆனால் இதனை கல்வி வாரியம் உறுதி செய்யவில்லை. இதே போல் தற்போது உளவியல் தேர்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த வினாத்தாள் பாக்கெட்டுகள் தொலைந்ததாக கல்வி வாரியத்துக்கு அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக உளவியல் பாடத்திற்கான தேர்வு ஏப்ரல் 4ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தேர்வு மையங்கள் வினாத்தாள்களை விரைவில் ஒருங்கிணைப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் வாரியத்தின் துணை செயலாளர் சங்கீதா பாட்டியா தெரிவித்துள்ளார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!