தமிழகத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க திட்டம் – 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு! அமைச்சர் தகவல்!

0
தமிழகத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க திட்டம் - 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு! அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க திட்டம் - 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு! அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க திட்டம் – 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு! அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டு அதன் மூலம் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழகத்தில் தொழில்துறை அதிகரிக்க பல திட்டங்கள் அமலில் இருக்கிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட இருப்பதாகவும், அதன் மூலம் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர இருப்பதாக அமைச்சர் ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார். மேலும் நாமக்கல்லில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்ட அவர் 305 பயனாளிகளுக்கு ₹1.99 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழக அறநிலையத் துறையில் புதிய வேலைவாய்ப்பு 2023 – தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

மேலும் இந்த விழாவில் அவர் பேசுகையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆன நிலையில் பல்வேறு மக்கள் நலப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், தமிழகத்தில் உள்ள அரசு வேலைவாய்ப்புகளை, வடமாநில இளைஞர்கள் தட்டிப் பறிக்கும் அவல நிலையை மாற்ற திமுக அரசு தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்பு, தமிழக இளைஞர்களுக்கு மட்டும் தான் என சட்டம் கொண்டு வந்து இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் நாமக்கல்லில் புறவழிச்சாலை அமைக்க ₹197 கோடி, ஆவின் பால் பண்ணை அமைக்க ₹64 கோடி ஒதுக்கி இருப்பதாகவும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க முயற்சி எடுக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்காக கையகப்படுத்தப்படும் நிலத்தில் 60 முதல் 70 சதவீதம், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் என அவர் தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!