மன உளைச்சலா ஆபீஸ்க்கு லீவு – குஷியில் ஊழியர்கள்!

0
மன உளைச்சலா ஆபீஸ்க்கு லீவு - குஷியில் ஊழியர்கள்!

சீனாவில் செயல்படும் வரும் சிறு நிறுவன உரிமையாளர் தனது ஊழியர்களை மனசு சரியில்லையின வேலைக்கு வர வேண்டாம் என கூறியுள்ளார்.

ஆபீஸ்க்கு லீவு:

இக்காலகட்டத்தில் ஆண், பெண் என இருபாலரும் பணம் சம்பாதிக்கும் நோக்கில் வேகமாக ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்காக அவர்கள் வேலைக்கு செல்லும் பொழுது வீடு மற்றும் அலுவலகத்தில் ஏற்படும் பிரச்சனைகளாலும், சண்டைகளாலும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதன் விளைவாக அலுவலக வேலைகளில் அவர்களால் சரிவர கவனம் செலுத்த முடிவதில்லை. மேலும் அவர்கள் பணிபுரியும் நிர்வாகமும் இதனால் பாதிக்கப்படுகிறது. இதற்கு தீர்வு கட்டும் விதமாக சீன நிறுவன உரிமையாளர் ஒருவர் புதிய யுக்தி ஒன்றை கையாண்டுள்ளார்.

கோடை காலம் வந்தாச்சு.. பவர் கட்டும் வந்தாச்சு – பொதுமக்களுக்கு அலர்ட்!

அதாவது சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள சில்லறை வணிக நிறுவன உரிமையாளரும், யூ டோங்லாய்லையின் நிறுவனரும், தலைவருமான யூ டோங்லாய் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை மனநிலை சரியில்லை என்றால் 10 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இதற்கு ‘மகிழ்ச்சியற்ற விடுப்பு’ (unhappy leaves’) எனவும் அவர் பெயர் சூட்டியுள்ளார். இந்த விடுமுறையானது பணியாளர்கள் வேலை மற்றும் வாழ்க்கையில் சமநிலையை அடைய உதவுவதற்காக வழங்கப்படுகிறது என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ஊழியர்கள் குஷியில் உள்ளார்கள்.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!