சீனாவின் மக்கள் தொகை கடும் சரிவு – அதிர்ச்சி அளிக்கும் புள்ளிவிவரங்கள்!!

0
சீனாவின் மக்கள் தொகை கடும் சரிவு - அதிர்ச்சி அளிக்கும்
சீனாவின் மக்கள் தொகை கடும் சரிவு - அதிர்ச்சி அளிக்கும்
சீனாவின் மக்கள் தொகை கடும் சரிவு – அதிர்ச்சி அளிக்கும் புள்ளிவிவரங்கள்!!

கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவின் மக்கள் தொகை பெருமளவு சரிவை கண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பஞ்சம் மற்றும் கொரோனா நோய்த்தொற்றுகள் இதற்கு காரணங்களாக சொல்லப்பட்டுள்ளது.

மக்கள் தொகை

உலகளவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட ஒரு நாடு சீனா. இந்த நாட்டின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 141 கோடிக்கும் அதிகம் ஆகும். அந்த வகையில், மிகப்பெரிய அளவிலான மக்கள் தொகையை உள்ளடக்கிய சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இறப்பு விகிதங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக சீனாவின் தேசிய புள்ளியியல் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், சீனாவின் மக்கள் தொகை தற்போது சுமார் 141.18 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் 141.26 கோடியாக இருந்தது.

மும்பை மெட்ரோ ரயில் பாதைகள் – ஜனவரி 19 அன்று பிரதமர் மோடி திறந்து வைப்பு!!

Follow our Twitter Page for More Latest News Updates

அதன்படி, கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சீனாவின் மக்கள் தொகை 8,50,000 என்ற எண்ணிக்கையில் குறைந்துள்ளது. இதற்கிடையில், அந்நாட்டில் குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கையை விட இறப்பு எண்ணிக்கை அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆய்வுத்தகவல்கள் கூறுகிறது. அந்த வகையில், அந்நாட்டின் ஒட்டுமொத்த பிறப்பு விகிதம் 7.52 லிருந்து 6.77 ஆக குறைந்துள்ளது. இந்த சரிவுக்கு காரணம், சீனாவில் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் தற்போதைய கொரோனா நோய்த்தொற்று என தகவல்கள் வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!