தமிழகத்தில் 10ம் வகுப்பு படித்தவர்கள் கவனத்திற்கு – குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு!

0
தமிழகத்தில் 10ம் வகுப்பு படித்தவர்கள் கவனத்திற்கு - குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு!
தமிழகத்தில் 10ம் வகுப்பு படித்தவர்கள் கவனத்திற்கு - குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு!
தமிழகத்தில் 10ம் வகுப்பு படித்தவர்கள் கவனத்திற்கு – குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு!

தென்காசி மாவட்ட பாதுகாப்பு அலகில், அலுவலர், உதவியாளர், கணக்காளர் உள்ளிட்ட 8 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் அனைத்தும் தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் மார்ச் 23 க்குள் விண்ணப்பிக்கலாம்.

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு :

தமிழ்நாட்டில் தமிழக அரசின் சமூகப்பாதுகாப்புத்துறை சென்னையை தலைமையிடமாக கொண்டு, மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தை அமைத்து, தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களிலும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகளை ஏற்படுத்தி, அதன் மூலம் குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பாதுகாப்பு அலுவலர் பணியில் 2 காலிப் பணியிடங்கள் உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரருக்கு 3 வருடம் பணி அனுபவம் கட்டாயம் இருக்க வேண்டும்.

IPL போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிக்கும் ‘தல’ தோனி? சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ஷாக்!

தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாத சம்பளமாக ரூ 21,000 வழங்கப்படும். இதையடுத்து சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal Probation Officer) பணியில் 1 காலிப் பணியிடம் உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க பி.எல் அல்லது எல்.எல்.பி வழக்கமான முறையில் சட்டம் பயின்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரருக்கு ஒரு வருடம் பணி அனுபவம் அவசியம். தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாத சம்பளமாக ரூ 21,000 வழங்கப்படும். இதனை தொடர்ந்து ஆற்றுப்படுத்துநர் (Counselor ) பணியில் 1 காலிப் பணியிடம் உள்ளது. இளங்கலை அல்லது முதுகலை பட்டம் படித்தவர் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ 14,000 வழங்கப்படும். 2 வருடம் பணி அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். சமூகப்பணியாளர் (Social Worker) பணிக்கு காலியிடங்கள் எண்ணிக்கை 2 ஆகும். இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம், 2 வருடம் பணி அனுபவம் அவசியம். சம்பளம் ரூ 14,000 ஆகும்.

மீண்டும் வேகமெடுக்கும் ஓமைக்ரான் தொற்று – 10 நகரங்களில் முழு ஊரடங்கு அமல்!

இந்த வகையில் கணக்காளர் (Accountant) பணிக்கு காலியிடங்கள் எண்ணிக்கை 1 ஆகும். இப்பணிக்கு விண்ணப்பதாரர் பி.காம் அல்லது எம்.காம் படித்திருக்க வேண்டும். 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். சம்பளம் ரூ 14,000 ஆகும். தகவல் பகுப்பாளர் (Information Analyser) பணியில் காலியிடங்களின் எண்ணிக்கை 1 ஆகும். இப்பணிக்கு விண்ணப்பதாரர் பி.ஏ/பி சி ஏ/பி.எஸ்சி புள்ளியியல் அல்லது கணக்கு படித்திருக்க வேண்டும். 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். சம்பளம் ரூ 14,000 ஆகும். உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் (Assistant and Computer Operator) பணியில் காலியிடங்களின் எண்ணிக்கை 1 ஆகும். இப்பணிக்கு விண்ணப்பதாரர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி கல்வியில் பட்டய பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் அவசியம். சம்பளம் ரூ 10,000 வழங்கப்படும். இதையடுத்து புறத்தொடர்பு பணியாளர் (External Liaison Officer) காலியிடங்களின் எண்ணிக்கை 2 ஆகும். விண்ணப்பதாரர் கல்வித்தகுதி 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் அவசியம். மாத சம்பளம் ரூ 8,000 ஆகும்.

விண்ணப்பித்தார் 40 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது.இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/2022/03/2022030764.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன், “மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் (பொ), அரசினர் குழந்தைகள் இல்லம், கிராம கமிட்டி மேல்நிலைப்பள்ளி அருகில், ரெட்டியார்பட்டி (இருப்பு), நெட்டூர் வழி, ஆலங்குளம் தாலுகா, தென்காசி – 627854” முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!