IPL போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிக்கும் ‘தல’ தோனி? சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ஷாக்!

0
IPL போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிக்கும் 'தல' தோனி? சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ஷாக்!
IPL போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிக்கும் 'தல' தோனி? சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ஷாக்!
IPL போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிக்கும் ‘தல’ தோனி? சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ஷாக்!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் 4 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கும் CSK அணியின் கேப்டன் MS தோனியின் ஓய்வு எப்போது இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

தோனி ஓய்வு:

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான MS தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வு குறித்த அறிவிப்பை 2020ம் ஆண்டு அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து உள்நாட்டு விளையாட்டு போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) விளையாடி வரும் தோனி ஓய்வு பெறுவது எப்போது என்று அவ்வப்போது சில கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்து வருகிறது. இப்படி இருக்க தற்போது 40 வயதான MS தோனியின் IPL ஓய்வு குறித்த அப்டேட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் நிர்வாகத்தில் இருக்கும் அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளார்.

மீண்டும் வேகமெடுக்கும் ஓமைக்ரான் தொற்று – 10 நகரங்களில் முழு ஊரடங்கு அமல்!

இது குறித்து CSK அதிகாரி கூறுகையில், ‘இது அவருடைய முடிவு. அவர் எப்போது அந்த அழைப்பை எடுப்பார் என்பது குறித்து எங்களால் கருத்து தெரிவிக்க முடியாது. எங்களைப் பொறுத்தவரை, MS தோனி பல ஆண்டுகளாக விளையாடுவது முக்கியம். ஆனால் அவர் எப்போது அழைப்பை எடுப்பார் என்பதை அவர் இன்னும் தெரிவிக்கவில்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இதற்கிடையில் கடந்த ஆண்டு IPL தொடரில் CSK அணி தனது நான்காவது சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தாலும், தோனி 16 போட்டிகளில் விளையாடி வெறும் 16.28 சராசரியில் 114 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, 144 தடை உத்தரவு அமல் – ஹிஜாப் வழக்குக்கு இன்று வெளியாகும் தீர்ப்பு!

இப்போது 2022 IPL போட்டிக்கு பிறகு ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா CSK அணியின் கேப்டன் பதவியை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக தனது கடைசி IPL போட்டியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சொந்த ரசிகர்கள் முன்னிலையில் விளையாட விரும்புவதாக தோனி தெளிவுபடுத்தி இருந்தார். இது குறித்து அவர் பேசும் போது, ‘எனது கடைசி டி20 சென்னையில் நடக்கும் என்று நம்புகிறேன். இது அடுத்த வருடமா அல்லது ஐந்து வருடங்கள் கழித்தா என்பது எங்களுக்கு தெரியாது’ என்று ஒரு CSK நிகழ்வின் போது எம்எஸ் தோனி விளக்கம் கொடுத்திருந்தார்.

இப்போது தோனியின் IPL ஓய்வு அறிவிப்பு குறித்து இன்னும் தெளிவான முடிவு தெரியாத நிலையில், அடுத்த CSK கேப்டனை நியமிப்பது பற்றிய விவாதத்தை கூட CSK அணியினர் மேற்கொள்ளவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து CSK நிர்வாக அதிகாரி கூறுகையில், ‘அடுத்த CSK அணியின் கேப்டனை முடிவு செய்யும் பேச்சுக்கே இடமில்லை. MS தோனி அந்த பொறுப்பை விட்டு வெளியேற முடிவு செய்தால், நாங்கள் அதற்காக அழைப்போம். அந்த சூழ்நிலையை நாங்கள் இன்னும் விவாதிக்கவில்லை’ என்று கூறியுள்ளார். எனவே IPL போட்டிகளில் தோனியின் ஓய்வு இப்போதைக்கு இருக்காது என்ற தகவல் கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!