மீண்டும் வேகமெடுக்கும் ஓமைக்ரான் தொற்று – 10 நகரங்களில் முழு ஊரடங்கு அமல்!

0
மீண்டும் வேகமெடுக்கும் ஓமைக்ரான் தொற்று - 10 நகரங்களில் முழு ஊரடங்கு அமல்!
மீண்டும் வேகமெடுக்கும் ஓமைக்ரான் தொற்று - 10 நகரங்களில் முழு ஊரடங்கு அமல்!
மீண்டும் வேகமெடுக்கும் ஓமைக்ரான் தொற்று – 10 நகரங்களில் முழு ஊரடங்கு அமல்!

கொரோனா மூன்று அலைகளை தாண்டி தற்போது தான் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா தொற்று பல மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கிறது. அதனால் சீனாவில் உள்ள நகரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு:

உலகம் முழுவதும் கொரோனா பரவல் மூன்று அலைகளை தாண்டி தற்போது ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டில் மட்டுமே லட்சக்கணக்கான மக்கள் இந்த தொற்றினால் இறந்தனர். இந்த கொரோனாவை கட்டுப்படுத்த அரசும் பல்வேறு நடவடிக்கைகளை முறைப்படி எடுத்தது. முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு மற்றும் பல கட்டுப்பாடுகளை விதித்தது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – அகவிலைப்படி (DA) உயர்வு குறித்து நாளை அறிவிப்பு?

இப்படி மாஸ்க் அணையாமல் செல்பவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. மக்கள் ஓரளவுக்கு இந்த ஊரடங்கு விதிகளை பின்பற்றியதால் தான் தற்போது தொற்று பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. தமிழகத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மக்களும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது வேலையை செய்யத் தொடங்கி விட்டனர். இந்நிலையில் சீனாவில் கொரோனா நாளுக்கு நாள் பல மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் சீனாவில் இருந்துதான் மற்ற நாடுகளுக்கும் கொரோனா பரவியது.

தமிழகத்தில் வரும் மார்ச் 18ம் தேதி பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

இரண்டு ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்கு நேற்று முன்தினம் 3400 பேர் ஓமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து கொரோனவை கட்டுப்படுத்த சீனாவில் உள்ள 10 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சீனாவின் பெரிய நகரமான ஹாங்காங்கில் சில குடியிருப்புகள் மற்றும் அலுவலக பகுதிகளில் மட்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் அதிகம் உள்ள ஐந்து நகரங்களில் இம்மாத தொடக்கத்தில் இருந்து ஊரடங்கு அமலில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!