கொளுத்தும் வெயிலால் குழந்தைகளுக்கு பாதிப்பு – ஐநா எச்சரிக்கை!

0
கொளுத்தும் வெயிலால் குழந்தைகளுக்கு பாதிப்பு - ஐநா எச்சரிக்கை!

தற்போது ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு ஐ.நா எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி அதீத வெப்ப அலையால் இந்த ஆண்டு கிழக்கு ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியங்களில் உள்ள 24 கோடிக்கு அதிகமான குழந்தைகள் பாதிக்கப்படுவர் என்னும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

ஐ.நா. எச்சரிக்கை:

பொதுவாக வெப்ப அலையால் பெரியவர்களை விட குழந்தைகள் அதிகளவு பாதிக்கப்படுவர். அதேபோல் இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்திலேயே வெப்பத்தின் அலை அதிகமாக இருப்பதால் கிழக்கு ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியங்களில் 24 கோடிக்கு அதிகமான குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என ஐ நா தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு சுவாச பாதை நோய்கள், வெப்பம் சார்ந்த நோய்கள், ஆஸ்துமா, இருதய நோய்கள் போன்ற அதீத வெப்ப அலை காரணமாக நோய்கள் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. பல்வேறு நாடுகள் குழந்தைகளை காப்பதில் முக்கிய முயற்சியை எடுத்து வருகிறது. குறிப்பாக பிலிப்பைன்ஸ் வெப்பநிலை காரணமாக குழந்தைகளுக்கான நேரடி வகுப்புகளை ரத்து செய்து ஆன்லைன் முறையில் வகுப்புகளை ஆரம்பித்து நடத்தி வருகிறது.

நிலுவையில் இருக்கும் ஓய்வூதியங்கள் – அரசு எடுத்த நடவடிக்கை!

காலநிலை மாற்றத்தை நாம் கட்டுப்படுத்தவில்லை எனில் 2050 ஆம் ஆண்டுக்குள் உலகின் 200 கோடி குழந்தைகள் அதிக வெப்பநிலை பாதிப்புக்கு உள்ளார்வார்கள் என ஆய்வாளர்கள் கணித்து உள்ளனர். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தளர்வான ஆடைகள் மற்றும் அவர்கள் வெளியில் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு வெப்பத்தால் ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் கால தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகவும் ஐநா அறிவுரை வழங்கியுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!