இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா – இன்றுடன் பதவிக்காலம் முடிவு!!

0
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா - இன்றுடன் பதவிக்காலம் முடிவு!!
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா - இன்றுடன் பதவிக்காலம் முடிவு!!
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா – இன்றுடன் பதவிக்காலம் முடிவு!!   

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவியில் இருந்த சுனில் அரோராவின் பதவிக்காலம் இன்றுடன் (12-04-2021) முடிவடைகிறது. இதற்கு அடுத்ததாக சுஷில் சந்திரா அந்த பதவியில் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேர்தல் ஆணையர்:

கடந்த மாதங்களில் இந்தியாவின் சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைமை ஆணையராக செயல்பட்டவர் சுனில் அரோரா. இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையரான சுனில் அரோரா கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பதவியில் இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. இவருக்கு பின்பாக அந்த பதவிக்கு ஒரு மூத்த தேர்தல் ஆணையர் நியமிக்கப்படுவது தான் வழக்கம். அந்த வகையில் சுனில் அரோராவுக்கு பின்பாக அந்த பதவியில் உயரதிகாரியாக இருக்கும் சுஷில் சந்திராவுக்கு தலைமை தேர்தல் அதிகாரி பதவி கிடைக்கும் என எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.

TN Job “FB  Group” Join Now

இந்திய தலைமை தேர்தல் அதிகாரியாக சுஷில் சந்திரா நியமிக்கப்பட்டால் நாளை (13-04-2021) அவர் பதவியேற்க வாய்ப்புள்ளது. முன்னதாக சுஷில் சந்திரா கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே 14ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் சுஷில் சந்திரா தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றால் அவரது தலைமையில் கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடைபெறும்.

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்க – 5 லட்சம் பேர் பதிவு!

இந்த மாநிலங்களில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஆட்சிக்காலம் முடிவடைகிறது. அதே போல உத்திரபிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை ஆட்சிக்காலம் அடுத்த ஆண்டு மே 14 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தற்போது இந்தியாவின் 23 ஆவது தேர்தல் அதிகாரியாக பதவியில் இருந்து வரும் சுனில் அரோரா பதவியிலிருந்து விலகிய பிறகு, 24வது தேர்தல் ஆணையராக நியமிக்கப்படும் சுஷில் சந்திரா மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here