அண்ணாமலை பல்கலையில் ‘பெண்ணியல்’ பட்டப்படிப்பு துவக்கம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!!
சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் செயல்படும் தொலைதூர கல்வி இயக்கத்தில் பெண்ணியல் பட்டப்படிப்பு துவங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைதூர கல்வி இயக்கம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள வரலாறு துறையில் புதிதாக பெண்ணியல் பட்டயப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த படிப்பில் சேர்ந்து படிக்க விருப்பமுள்ளவர்கள் எதாவது ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த படிப்பில் ஆண், பெண் என இருபாலரும் சேர்ந்து படிக்கலாம். இந்த படிப்பில் சேர வயது வரம்பு எதுவும் இல்லை.
கல்லூரி வாகனங்களுக்கு சிசிடிவி & ஜிபிஎஸ் பொருத்துவது கட்டாயம் – உயர்கல்வி நிலையங்கள் அதிருப்தி!!
பெண்களின் முன்னேற்றத்திற்காக இந்த படிப்பு அறிமுகப்படுத்தபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்பு பெண்கள் சுய வேலைவாய்ப்பு பெறவும், ஆளுமை தன்மையுடன் செயல்படவும் பயன்படும். இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நேரடியாகவோ, இளையதளம் மூலமாகவோ அல்லது அஞ்சல் மூலமாக தொலைதூர கல்வி இயக்கத்தை தொடர்பு கொள்ளலாம்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்