பிப். 1 ( நாளை) தொலைநிலை இளநிலை, முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு – சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் கவனத்திற்கு!

0
பிப். 1 ( நாளை) தொலைநிலை இளநிலை, முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு - சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் கவனத்திற்கு!
பிப். 1 ( நாளை) தொலைநிலை இளநிலை, முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு - சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் கவனத்திற்கு!
பிப். 1 ( நாளை) தொலைநிலை இளநிலை, முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு – சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் கவனத்திற்கு!

சென்னை பல்கலைக்கழகத்தின் இளநிலை, முதுநிலை மற்றும் எம்பிஏ போன்ற பட்டப்படிப்புகளுக்கான 2022ம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்வு முடிவுகள்:

சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை இளநிலை, முதுநிலை மற்றும் எம்பிஏ மாணவர்களுக்கு 2022 ஜூன் மாதம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டது. தேர்வுகள் முடிந்த பின்னர் தேர்வு முடிவு குறித்த அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என்ற பலத்த எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் நிலவி வந்தது. இந்நிலையில், கடந்த ஜனவரி 13ம் தேதி அன்று சென்னை பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை மற்றும் எம்பிஏ மாணவர்களின் தேர்வு முடிவுகள் மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் 35 வகையான பொருட்களின் இறக்குமதி வரி உயர்வு.. 2023-24ம் ஆண்டு பட்ஜெட்டில் வரவுள்ள அறிவிப்பு!

ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஜனவரி 13ம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதனால், பிப்ரவரி 1ம் தேதியான நாளை சென்னை பல்கலையின் தொலைநிலை இளநிலை, முதுநிலை மற்றும் எம்பிஏ மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், தங்கள் தேர்வு முடிவுகளை http://www.ideunom.ac.in/ என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!