சென்னை வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு – போக்குவரத்து மாற்றம்!

0
சென்னை வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு - போக்குவரத்து மாற்றம்!
சென்னை வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு – போக்குவரத்து மாற்றம்!

சென்னையில் அசோக் நகர் காசி தியேட்டர் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இன்று முதல் 10 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் சோதனை அடிப்படையில் செய்யபட உள்ளது. இவ்வாறு திடீரென பாதை மாற்றப்பட்டுள்ளது வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

போக்குவரத்து மாற்றம்:

தமிழகத்தில் மழையின் காரணமாக வாகனங்கள் செல்ல கூடிய வழக்கமான பாதை சேதமடைவதாலும், பராமரிப்பு பணிகள், மேம்பாலம் கட்டுதல் போன்ற காரணங்களால் போக்குவரத்து பாதை மாற்றம் செய்யப்படும். இந்த முறை சென்னையில் உள்ள அசோக் நகர் காசி தியேட்டர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தற்போது சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிள்ளையார் கோயில் தெரு எம்ஜிஆர் நகரில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் மேற்கு சைதாப்பேட்டை மற்றும் கிண்டி செல்ல விரும்பும் வாகனங்கள் காசி திரையரங்கம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி 150 மீட்டருக்கு செல்ல வேண்டும்.

மத்திய அரசின் PM கிசான் திட்ட விவசாயிகளுக்கு ரூ.2000 – கால அவகாசம் நீட்டிப்பு!

கே.கே.நகர் ஆர்டிஓ அலுவலகம் முன்பாக யூ டேர்ன் போட்டு தாங்கள் செல்ல வேண்டிய இலக்கை வாகன ஓட்டிகள் அடைய முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிள்ளையார் கோயில் தெரு மற்றும் மேற்கு சைதாப்பேட்டையில் இருந்து வரும் வாகனங்கள் கனரக வாகனங்கள் தவிர கே.கே.நகர் வடபழனி மற்றும் கோயம்பேடு செல்ல விரும்பும் வாகன ஓட்டிகள் காசி தியேட்டர் சந்திப்பில் சுமார் 160 மீட்டருக்கு சென்று காசி மேம்பாலத்தின் அடியில் யூ டேர்ன் போட்டு தங்களது இலக்கை அடையலாம். அதே போல அசோக் நகர் 12வது அவென்யூ வழியாக வரும் கனரக வாகனங்கள் கே.கே.நகர், வடபழனி மற்றும் கோயம்பேடு ஆகிய பகுதிகளுக்கு செல்ல விரும்பும் வாகன ஓட்டிகள் நாகாத்தம்மன் கோவில் தெரு வழியாக அசோக் நகர் 11வது அவென்யூ பகுதியை அடையலாம்.

பள்ளி மாணவர்களுக்கு 30 நாட்கள் கோடை விடுமுறை – மாநில கல்வித்துறை அறிவிப்பு!

மேலும் வேப்பேரி-ஈ.வே.ரா சாலையில் உள்ள தாசப்பிரகாஷ் சந்திப்பில் காலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும் தாசபிரகாஷ் சந்திப்பை இணைக்கும் ராஜா அண்ணாமலை சாலை மற்றும் அழகப்பா சாலையில் ஈ.வே.ரா சாலை சந்திப்பு முதல் ராஜா அண்ணா சாலை மற்றும் அழகப்பா சாலையில் ஈவேரா சாலை சந்திப்பு முதல் ராஜா அண்ணாமலை சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனால் ஈ.வே.ரா சாலை சந்திப்பு மற்றும் நாயர் பாலம் சந்திப்பில் இருந்து டாக்டர் அழகப்பா சாலை வழியாக வாகனங்கள் செல்ல இயலவில்லை. கங்காதீஸ்வரர் கோயில் தெரு மற்றும் ராஜா அண்ணாமலை சாலை சந்திப்பில் இடது புறமாக திரும்பி டாக்டர் அழகப்பா சாலை, வள்ளியம்மாள் தெரு சந்திப்பில் வலது புறமாக திரும்பி டாக்டர் நாயர் பாயிண்ட்டில் பயணிக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!