மத்திய அரசின் PM கிசான் திட்ட விவசாயிகளுக்கு ரூ.2000 – கால அவகாசம் நீட்டிப்பு!

0
மத்திய அரசின் PM கிசான் திட்ட விவசாயிகள் கவனத்திற்கு - கால அவகாசம் நீட்டிப்பு!
மத்திய அரசின் PM கிசான் திட்ட விவசாயிகளுக்கு ரூ.2000 – கால அவகாசம் நீட்டிப்பு!

இந்தியாவில் விவசாயிகளுக்கான பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் பணம் பெறுவதற்கு eKYC முடிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆன்லைன் மூலம் eKYC செயல்முறைகளை மேற்கொள்வது குறித்து இப்பதிவில் காண்போம்.

கிசான் திட்டம்:

இந்தியாவில் விவசாயிகளுக்கு பயன் தரும் வகையில் 2019ம் ஆண்டு பிரதம மந்திரி கிசான் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் விவசாயிகளிடையே பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டத்தில் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஒரு ஆண்டில் 6000 ரூபய் நிதி வழங்கப்படுகிறது. அதன்படி விவசாயிகளின் வங்கி கணக்கில் தவணை நிதி தலா ரூ.2,000 வீதம் 3 தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது. சுமார் 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பலன் பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தின் அரசின் நிபந்தனைகளின் படி தகுதி பெற்றவர்கள் மட்டுமே பயன் பெற முடியும்.

இன்ஜினியரிங் படிப்புகளுக்கான கட்டண உயர்வு – AICTE வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மேலும் கிசான் திட்டத்தில் நிதி பலன்களை தொடர்ந்து பெற eKYC செயல்முறையை முடிப்பது கட்டாயமாகும். ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தபடியே நாம் eKYC செயல்முறைகளை செய்யலாம். இதனை முடிக்க மார்ச் 31 வரை மத்திய அரசு ஏற்கனவே கால அவகாசம் வழங்கியது. தற்போது இதற்கான காலக்கெடுவை மே 31 வரை நீட்டித்துள்ளது. இதுவரை 10 கிசான் தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக 11வது தவணைத்தொகை வழங்கப்படவுள்ளது. அதற்கான விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகிறது. தற்போது வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை பயன்படுத்தி eKYC செயல்முறைகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

eKYC செயல்முறைகள்:

  • முதலில் https://pmkisan.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் Farmers Corner பிரிவில் eKYC தேர்வு செய்யவும்.
  • புதிதாக திறக்கும் பக்கத்தில் ஆதார் எண் பதிவிட்டு Search பட்டனை கிளிக் செய்யவும்.
  • இப்போது மொபைல் எண் பதிவிட்டு OTP பெறவும்.
  • உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP பதிவிட்டு Submit கொடுக்கவும். பிறகு உங்கள் eKYC முடிந்து விடும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!