சென்னை வானிலை மையத்தின் புதிய இயக்குனராக செந்தாமரை கண்ணன் – விரைவில் பதவி ஏற்பு!

0
சென்னை வானிலை மையத்தின் புதிய இயக்குனராக செந்தாமரை கண்ணன் - விரைவில் பதவி ஏற்பு!
சென்னை வானிலை மையத்தின் புதிய இயக்குனராக செந்தாமரை கண்ணன் - விரைவில் பதவி ஏற்பு!
சென்னை வானிலை மையத்தின் புதிய இயக்குனராக செந்தாமரை கண்ணன் – விரைவில் பதவி ஏற்பு!

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனராக புவியரசன் பதவியில் இருந்தார். ஆனால் தற்போது இவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனராக பதவி ஏற்பது யார்? என்பது குறித்து விரிவான தகவல்களை பார்க்கலாம்.

புதிய இயக்குனர்

தமிழகத்தில் நிலவும் வெயில், மழை, வெள்ளம் மற்றும் புயல் போன்ற வானிலையை முன்கூட்டியே கணித்து மக்களுக்கு அறிவிக்கும் முக்கியமான பணியை சென்னை வானிலை ஆய்வு மையம் செய்து வருகிறது. அத்துடன் பேரிடர் காலத்தில் வானிலை ஆய்வு மையம் சொல்வதை வைத்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனராக எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் செயல்பட்டு வந்தார். ஆனால் இவர் தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் செயலியின் முக்கிய அம்சங்கள்!

இவருக்கு பதிலாக புவியரசன் என்பவர் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனராக பதவி ஏற்றார். இவர் வானிலை தொடர்பான புள்ளி விவரங்களை மிக தெளிவாகவும், வெளிப்படையாகவும் அறிவித்து வந்தார். மேலும் பத்திரிக்கை நிருபர்களுக்கு எந்த நேரத்திலும் வானிலை தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மைய வளாகத்தில் உள்ள காலநிலை சேவை ஆவணக் காப்பகத்தின் இயக்குனராக இவர் இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து இப்பதவியில் உள்ளவர் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

TCS, Infosys, Wipro நிறுவனங்களில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – பட்டதாரி இளைஞர்கள் கவனத்திற்கு!

அதன்படி இப்பதவியில் இருந்த செந்தாமரை கண்ணன் என்பவர் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வானிலை துறையில் 22 ஆண்டு காலம் பணி அனுபவம் பெற்று இருக்கிறார். மேலும் இவர் புனேயில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தில் உள்ள காலநிலை தேசிய ஆவண பிரிவு, விவசாயிகள் ஆலோசனை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியாற்றிய அனுபவம் பெற்று உள்ளார். அதனால் வானிலை நிலவரங்களை பற்றி முன்கூட்டியே கணிக்க கூடியவராக திகழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!