அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் செயலியின் முக்கிய அம்சங்கள்!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - மத்திய அரசின் செயலியின் முக்கிய அம்சங்கள்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - மத்திய அரசின் செயலியின் முக்கிய அம்சங்கள்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் செயலியின் முக்கிய அம்சங்கள்!

மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மேரா ரேஷன் செயலியின் முக்கிய அம்சங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்த சில விவரங்களை இப்பதிவில் காணலாம்.

மேரா ரேஷன்

நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களையும் ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒருங்கிணைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள எந்தவொரு குடிமகனும், நாட்டின் எந்தவொரு மூலையிலும் சென்று தங்களுக்கான ரேஷன் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும். அதாவது புலம் பெயர் தொழிலாளர்களுக்காக மத்திய அரசு துவங்கியுள்ள ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் கீழ் தற்போது மேரா ரேஷன் என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஹால்டிக்கெட் வெளியீடு!

இந்த செயலியானது வேறு மாநிலத்தில் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு ரேஷன் கடை, பொருட்கள், டீலர்கள் தொடர்பான பல தகவல்களை அளிக்கிறது. இப்போது மேரா ரேஷன் செயலியில் இணைக்கப்பட்டுள்ள சேவைகள், பயன்பாடுகள் மற்றும் அதன் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்களை கீழே விரிவாக தெரிந்துகொள்ளலாம். முதலாவதாக மேரா ரேஷன் மொபைல் ஆப் இந்தி மற்றும் ஆங்கிலம் உட்பட 10 பிராந்திய மொழிகளில் கிடைக்கிறது.

இந்த செயலியின் மூலம் உங்களுக்கு கோதுமை மற்றும் அரிசி எவ்வளவு வழங்கப்படுகிறது மற்றும் அதன் விலை என்ன, இன்னும் எவ்வளவு பொருட்கள் பெறப்பட உள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். இது தவிர, ரேஷன் கார்டில் எவ்வளவு தொகை விநியோகிக்கப்பட்டுள்ளது, வீட்டைச் சுற்றி எத்தனை ரேஷன் டீலர்கள் உள்ளனர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இந்த ஆப் மூலம் பெறலாம். உங்கள் தேவைகளுக்கு ஏற்ப ரேஷன் கார்டு டீலரையும் மாற்றிக் கொள்ளலாம்.

TCS, Infosys, Wipro நிறுவனங்களில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – பட்டதாரி இளைஞர்கள் கவனத்திற்கு!

இந்த செயலியின் மூலம் நீங்கள் ரேஷன் டீலரின் உரிம எண் மற்றும் பெயர், முகவரி ஆகியவற்றை பெற முடியும். மேலும் ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இது தவிர, நீங்கள் நாடு முழுவதும் எங்கு சென்றாலும், இந்த செயலி மூலம் உங்களைச் சுற்றியுள்ள டீலர்களைப் பற்றிய தகவல்களைப் பெற முடியும். இந்த முழு அமைப்பும் Google Maps உடன் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!