‘பாரதி கண்ணம்மா’ தொடரில் மீண்டும் களமிறங்கும் ரோஷினி ஹரிப்ரியன் – ரசிகர்கள் ஆரவாரம்!

0
'பாரதி கண்ணம்மா' தொடரில் மீண்டும் களமிறங்கும் ரோஷினி ஹரிப்ரியன் - ரசிகர்கள் ஆரவாரம்!
'பாரதி கண்ணம்மா' தொடரில் மீண்டும் களமிறங்கும் ரோஷினி ஹரிப்ரியன் - ரசிகர்கள் ஆரவாரம்!
‘பாரதி கண்ணம்மா’ தொடரில் மீண்டும் களமிறங்கும் ரோஷினி ஹரிப்ரியன் – ரசிகர்கள் ஆரவாரம்!

விஜய் டிவியின் முக்கிய தொடரான பாரதி கண்ணம்மா தற்போது அதிக மாற்றங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், மீண்டும் கண்ணம்மாவாக ரோஷினி நடிக்க இருப்பது பற்றிய அதிகாரபூர்வமற்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா:

ஒரு மெகா வெற்றி அடைந்த மெகா சீரியலின் நாயகன் மற்றும் நாயகி இருவரும் புதுமுகமாக அறிமுகம் ஆனவர்கள் தான் என்பதை ரசிகர்கள் யாரும் இந்த அளவிற்கு பார்த்திருக்க மாட்டார்கள். இதை உண்மையாக்கியது பாரதி கண்ணம்மா சீரியல் தான். நாயகன் அருண் கூட முன்னதாக பல குறும்படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி நடிப்பில் முதன் முறையாக களம் இறங்கியது பாரதி கண்ணம்மா சீரியல் தான். ஆனால் ரோஷினி ஒரு அறிமுக நடிகை என்பதை யாராலும் ஒத்துக் கொள்ள முடியாது.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லையாக களமிறங்கிய புதிய நடிகை – ரசிகர்கள் ஷாக்!

அந்த அளவிற்கு பாரதி கண்ணம்மா சீரியலில் வந்த ஒவ்வொரு கட்டத்திலும் அந்த வேடத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதனால் கண்ணம்மாவாக ரோஷினி மக்கள் மனதில் நீங்காத தனி இடத்தை பிடித்துள்ளார். இடையில் சில மாதங்களுக்கு முன்னதாக ரோஷினி தனிப்பட்ட காரணங்களுக்காக பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார். இதனால் கண்ணம்மாவின் ரசிகர்கள் அதிக வருத்தத்தில் ஆழ்ந்தனர். ரோஷினி தான் கண்ணம்மாவாக நடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.

ரோஷினி, மனோபாலா & அம்மு அபிராமியுடன் துவங்கும் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 – வைரலாகும் வீடியோ!

ஆனால் ரோஷினிக்கு பதிலாக வினுஷா தேவி என்பவர் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வந்தார். இது ஒரு புறம் இருக்க, ரோஷினியின் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக தற்போது மீண்டும் பாரதி கண்ணம்மா சீரியலில் ரோஷினி கண்ணம்மாவாக நடிப்பதாக ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்துள்ளனர். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் சீரியலில் திடீரென்று ஏற்பட்ட தொய்வு இல்லாமல் மீண்டும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!