ரோஷினி, மனோபாலா & அம்மு அபிராமியுடன் துவங்கும் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 – வைரலாகும் வீடியோ!

0
ரோஷினி, மனோபாலா & அம்மு அபிராமியுடன் துவங்கும் 'குக் வித் கோமாளி' சீசன் 3 - வைரலாகும் வீடியோ!
ரோஷினி, மனோபாலா & அம்மு அபிராமியுடன் துவங்கும் 'குக் வித் கோமாளி' சீசன் 3 - வைரலாகும் வீடியோ!
ரோஷினி, மனோபாலா & அம்மு அபிராமியுடன் துவங்கும் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் துவங்க இருக்கும் நிலையில், இதற்கான ப்ரோமோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி பார்வையாளர்களின் கவனம் பெற்று வருகிறது.

குக் வித் கோமாளி

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்து வரும் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சி அடுத்த வாரம் முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இம்முறை சினிமா மற்றும் சின்னத்திரையில் இருந்து புத்தம் புதிய போட்டியாளர்களுடன், கோமாளிகளின் ஸ்வாரசியமான கலாட்டாக்களும் இணைந்து இந்த சீசன் ஆரவாரமாக வெளியாக இருக்கிறது. அதே வேளையில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் விவரங்கள் அதன் ப்ரோமோவில் இடம்பிடித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

பரணி, வனிதா & ஜூலி கலந்து கொள்ளும் ‘பிக் பாஸ்’ அல்டிமேட் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

அந்த வகையில் விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய நடிகை ரோஷினி ஹரிப்ரியன் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் குக் ஆக கலந்து கொள்ள இருக்கிறார். இவரை தொடர்ந்து சினிமா பிரபலங்களான அசுரன் அம்மு அபிராமி, வித்யூலேகா, நடிகர்கள் மனோபாலா, தர்ஷன் மற்றும் சந்தோஷ் ஆகியோர் பங்குபெறுகின்றனர். மேலும் கிரேஸ் கருணாஸ், கானா பாடகர் அந்தோணி தாஸ் உள்ளிட்ட 8 போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ ரசிகர்களுக்கு அடித்தது ஜாக்பாட் – இனி OTT ஒளிபரப்பு! அதிரடி ப்ரோமோ ரிலீஸ்!

இவர்களை தொடர்ந்து கோமாளிகளாக பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, சுனிதா, பரத், குரேஷி, சக்தி ஆகியோர் மக்களை மகிழ்விக்க வருகின்றனர். இப்போது புதிய போட்டியாளர்களுடன் களம் காண இருக்கும் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்று ‘இது குக் வித் கோமாளி, முடிஞ்சா சிரிக்காம சமாளி’ என்ற கேப்ஷனுடன் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் போட்டியாளராக களமிறங்க இருக்கும் பல்வேறு நகைச்சுவை நட்சத்திர பட்டாளங்களுடன் கோமாளிகளும் சேர்ந்தால் அங்கு கலாட்டாவுக்கு பஞ்சமில்லை என்று கணித்துள்ள ரசிகர்கள் இதன் ஒளிபரப்புக்காக எதிர்பார்த்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!