விஜய் டிவி ‘பிக் பாஸ்’ ரசிகர்களுக்கு அடித்தது ஜாக்பாட் – இனி OTT ஒளிபரப்பு! அதிரடி ப்ரோமோ ரிலீஸ்!

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' ரசிகர்களுக்கு அடித்தது ஜாக்பாட் - இனி OTT ஒளிபரப்பு! அதிரடி ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி 'பிக் பாஸ்' ரசிகர்களுக்கு அடித்தது ஜாக்பாட் - இனி OTT ஒளிபரப்பு! அதிரடி ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ ரசிகர்களுக்கு அடித்தது ஜாக்பாட் – இனி OTT ஒளிபரப்பு! அதிரடி ப்ரோமோ ரிலீஸ்!

பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது OTT வெளியீடாக புதிய ஷோ பற்றி நேற்று அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் இந்த புதிய நிகழ்ச்சி குறித்து ரசிகர்கள் அதிக உற்சாகத்தோடு காத்திருக்க தொடங்கியுள்ளனர்.

பிக்பாஸ் அல்டிமேட்:

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 5 வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. சினிமாவின் உச்ச நட்சத்திரம் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது மிகவும் ஆச்சரியப்படுத்தும் விஷயமாக பேசப்பட்டது. வெற்றிகரமாக 5 சீசன்களை பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்துள்ளது. இதில் கலந்து கொண்ட ஒவ்வொரு போட்டியாளரும் முன்னர் இருந்ததை விட அதிக அளவில் பிரபலமடைந்தனர். இந்நிலையில், தெலுங்கு மற்றும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி டிவியை தவிர OTT தளத்திலும் புதிதாக வெளியாகியுள்ளது.

6 வருடம் கழித்து மீண்டும் சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகர் விஜய் அம்மாவின் ஃப்ரண்ட் – ரசிகர்கள் உற்சாகம்!

இதுபோல் தமிழிலும் பிக்பாஸ் OTT ஷோ தொடங்கப்பட உள்ளதாக முன்னதாக பல தகவல்களும் வெளியாகி வந்தது. அதை உறுதிபடுத்தும் விதமாக நேற்றைய ஃபினாலே நிகழ்ச்சியில் கமல் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அதற்க்கு ‘பிக்பாஸ் அல்டிமேட்’ என்று பெயரிட்டுள்ளனர். டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் தொடர்ந்து 24 மணி நேரமும் ஒளிபரப்பபட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை எப்போதும், எங்கிருந்தும் காணலாம். இந்நிலையில் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ள பிக்பாஸ் அல்டிமேட் ஷோக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் இனியா யார் தெரியுமா? – வியப்பில் ரசிகர்கள்!

அதில், கமல் முன்னதாக இருந்த பிக் பாஸ் வீட்டின் சுவர்கள் தற்போது பத்தாது, அதனால் இன்னும் உயரமாக்குமாறு கூறுகிறார். இந்த வீட்டில் இதுவரை வந்த போட்டியாளர்கள் தான் இந்த முறை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும், தோற்ற இடத்தில் தானே ஜெயிக்க முடியும் என்றும் கமல் மிகவும் மிடுக்காக கூறுகிறார். இந்த நிகழ்ச்சியையும் கமல் தான் தொகுத்து வழங்க உள்ளார் என்பது கூடுதல் விருந்து. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் தனி தனியாக ஒரு சீசனில் பார்த்தவர்கள், தற்போது ஒரே நேரத்தில் அனைவரையும் பார்க்கலாம் என்பதால் அதிக மகிழ்ச்சியில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!