தமிழகத்தில் நீட் மோசடியை தடுப்பதற்கான வழிமுறைகள் – சிபிசிஐடி, சிபிஐ பரிந்துரை!

0
தமிழகத்தில் நீட் மோசடியை தடுப்பதற்கான வழிமுறைகள் - சிபிசிஐடி, சிபிஐ பரிந்துரை!
தமிழகத்தில் நீட் மோசடியை தடுப்பதற்கான வழிமுறைகள் - சிபிசிஐடி, சிபிஐ பரிந்துரை!
தமிழகத்தில் நீட் மோசடியை தடுப்பதற்கான வழிமுறைகள் – சிபிசிஐடி, சிபிஐ பரிந்துரை!

தமிழகத்தில் தற்போது நீட் தேர்வில் பல்வேறு வகைகளில் முறைகேடுகள் நிகழ்கின்றன. அதனால் இதனை கட்டுப்படுத்தும் வகையில் ஐகோர்ட் கிளையில் சிபிசிஐடி, சிபிஐ சில வழிமுறைகளை பரிந்துரை செய்துள்ளனர்.

நீட் தேர்வு

தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக 10 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டது. அதன்படி முறைகேட்டில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்கு ஒன்று ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்துள்ளது. இதில் சிபிசிஐடி, சிபிஐ தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க சில வழிமுறைகளை பரிந்துரை செய்துள்ளார். இவர் தெரிவித்துள்ளதாவது, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதார் தங்களின் புகைப்படம், கைரேகை ஆகியவற்றையும் அதோடு கருவிழியும் பதிவு செய்திட வேண்டும் என்று கூறியுள்ளார்.

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – கட்டுப்பாட்டு வழிமுறைகள் அறிவிப்பு!

இதனை தொடர்ந்து மனுதாரர் பெயர், அவரது பெற்றோர் பெயர், முகவரி உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்து, கெஜட் அதிகாரியின் மூலம் சான்றொப்பம் பெற்று அதன்பின்பு பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அதனை நிராகரிக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரர்கள் தேர்வு கட்டணத்தை தங்களின் வங்கி கணக்கிலோ அல்லது பெற்றோரின் வங்கி கணக்கில் இருந்து மட்டுமே செலுத்த வேண்டும். இதனை தொடர்ந்து மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்றுச் சான்றிதழில் அவர்களின் எமிஸ் எண்ணை பதிவிட வேண்டும்.

இதையடுத்து தேர்வு கூடத்திற்கு வரும் தேர்வர்களை தேர்வுச்சீட்டிலுள்ள கருவிழி உள்ளிட்ட விபரங்களுடன் ஒப்பீடு செய்ய வேண்டும். அத்துடன் தேர்வர்கள் அனைவரையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் முறைகேடுகள் ஏற்படாதவாறு இருக்க தேர்வு மையம் மற்றும் கவுன்சலிங் ஆகிய இடங்களில் கைரேகை பதிவு செய்யப்பட வேண்டும். இதனை தொடர்ந்து பேஸ் டிடெக்டர் போன்ற நவீன கருவிகளை பயன்படுத்த வேண்டும். இதே போல் தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வழிமுறைகளை பரிந்துரைத்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here