கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய தடை? சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

0
கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய தடை? சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய தடை? சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய தடை? சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து சமஸ்கிருதத்தில் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

தமிழில் அர்ச்சனை:

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யக்கூடாது என்றும் சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் எனவும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

தமிழ் வழியில் போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு – அரசுக்கு கோரிக்கை!

அதில் கோவில்களில் ஆகம விதிகளை மீறி தமிழில் அர்ச்சனை செய்யக்கூடாது எனவும் சமஸ்கிருதத்தில் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில் தமிழில் அர்ச்சனை செய்ய எந்த தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது பக்தர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது என கூறியுள்ளனர்.

கீழடி அகழாய்வு, தமிழர்களின் வரலாறு குறித்து பாடம் எடுக்கும் சீன பெண் – அவரே வெளியிட்ட வீடியோ!

அதனை தொடர்ந்து குறிப்பிட்ட மொழியில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்த முடியாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். உயர் நீதிமன்றம் பரிசீலித்து அளித்த தீர்ப்புக்கு முரணான முடிவை எடுக்க முடியாது என்றும், ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்ய தேவையில்லை எனவும், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதனை தொடர்ந்து கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டதில் எவ்வித மாறுதல்களும் இல்லை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here