கீழடி அகழாய்வு, தமிழர்களின் வரலாறு குறித்து பாடம் எடுக்கும் சீன பெண் – அவரே வெளியிட்ட வீடியோ!

0
கீழடி அகழாய்வு, தமிழர்களின் வரலாறு குறித்து பாடம் எடுக்கும் சீன பெண் - அவரே வெளியிட்ட வீடியோ!
கீழடி அகழாய்வு, தமிழர்களின் வரலாறு குறித்து பாடம் எடுக்கும் சீன பெண் - அவரே வெளியிட்ட வீடியோ!
கீழடி அகழாய்வு, தமிழர்களின் வரலாறு குறித்து பாடம் எடுக்கும் சீன பெண் – அவரே வெளியிட்ட வீடியோ!

சீனாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ் துறை மாணவர்களுக்கு கீழடி அகழாய்வு மற்றும் தமிழர்களின் வரலாற்று பெருமைகளை பற்றி சீனாவைச் சேர்ந்த நிறைமதி கிக்கி ஜாங் பாடம் எடுத்து வருகிறார். இது குறித்த வீடியோ ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

தமிழின் பெருமை:

மதுரை அருகே உள்ள கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த கட்டிட சான்றுகள், தொல்பொருட்கள் ஆகியவை தமிழ்நாட்டின் வரலாற்று துவக்கம் குறித்தும் தமிழர்களின் வாழ்வு குறித்தும் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பல வாழ்க்கை வரலாற்றை விலக்குவதாக இருக்கிறது. தமிழர்களின் பெருமைக்குரிய புள்ளிகளில் ஒன்றாக கீழடி உருவெடுத்திருக்கிறது. மதுரை நகரத்திற்கு தென்கிழக்கில் சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கிராமத்தில் 2014 ஆம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆகழ்வாய்வில் அங்கு 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

நாட்டின் வேலைவாய்ப்பு ஆகஸ்ட், ஜூலை மாதங்களில் 15 லட்சமாக குறைவு – CMIE அறிக்கை!

அங்கு தோண்ட தோண்ட தினந்தோறும் எண்ணற்ற தொல்லியல் பொருட்கள் கிடைக்கின்றன. முதலாம் கட்ட அகழாய்வு முதல் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் 7ஆம் கட்ட அகழாய்வு வரை கீழடியில் 40க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்டது. அகழாய்வுகளில் சங்க கால மக்களின் எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன. சங்ககால இலக்கிய பாடல்களான சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்ற பாடல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் தாயக் கட்டைகள், சிறு குழந்தைகள் விளையாடிய சுடுமண் பொம்மைகள், பெண்கள் விளையாடிய சில்லு, சதுரங்க காய்கள் போன்ற பொருட்கள் என பல வகையான பொருள்கள் ஒவ்வொரு நாளும் கிடைத்து கொண்டே வருகிறது.

கொரோனாவால் உயிரிழந்த 2,000 அரசு ஊழியர்கள் குடும்பத்திற்கு நிவாரணம்!

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் கீழடி பகுதி திறந்தவெளி அருங்காட்சியமாக செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ் துறை மாணவர்களுக்கு தமிழர்களின் பெருமைகளில் ஒன்றான கீழடி அகழாய்வு மற்றும் தமிழர்களின் வரலாற்று பெருமைகளை பற்றி சீனாவை சேர்ந்த நிறைமதி கிக்கி ஜாங் அங்குள்ள தமிழ் மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார். இது பற்றிய வீடியோ ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழர்களுக்கும் சீன மக்களுக்கும் இடையே பல ஆண்டாக தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இப்போது இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here