சென்னை சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை அறிவிப்பு – போலி செயலிகளில் முதலீடு!
தற்போது நாளுக்கு நாள் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் நிலையில் மக்கள் மொபைல் செயலிகளில் தங்கள் பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். இந்நிலையில் போலி செயலிகளில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என சென்னை சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சைபர் கிரைம் எச்சரிக்கை:
பொதுமக்களும் தங்களை தொழில்நுட்பத்திற்கு ஏற்றாற் போல் மாற்றி அமைத்து கொள்கின்றனர். மக்கள் அதிகமாக மொபைல் போனை பயன்படுத்தி வருகின்றனர். அனைத்து தேவைகளுக்கும் மொபைல் போனில் செயலிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இன்றைய காலகட்டத்தில் மாத வருமானத்தை வைத்து வாழ்க்கை நடத்துவது என்பது மிக கடினமான ஒன்றாக உள்ளது. அதனால் மாற்று வருமானத்தை மக்கள் நாடுகின்றனர்.
மகளிருக்கு ஒரு கிலோ இயற்கை உரம் 1 ரூபாய் – மதுரை மாநகராட்சியின் புதிய அறிவிப்பு!
எளிய முறையில் விரைவில் பணம் சம்பாதிப்பது மற்றும் டிரேடிங் என பல செயலிகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. மக்களும் இது போன்ற செயலிகளில் தங்கள் பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். இதில் பல போலி செயலிகள் உள்ளடங்கும். அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தைகள் கூறி பல்வேறு செயலிகள் மூலம், பொதுமக்களை பணம் முதலீடு செய்ய வைத்து லட்சக்கணக்கில் ஏமாற்றும் சைபர் குற்றவாளிகளின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளது.
TN Job “FB
Group” Join Now
முகம் தெரியாத நபரை நம்பி பணம் முதலீடு செய்யும் முன் சற்று சிந்திக்க வேண்டும் என பொதுமக்களுக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் அறிவுரை வழங்கி வருகின்றனர். மக்களிடையே இது குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லாததால் “நல்லா யோசிங்க” என்ற தலைப்பில் விழிப்புணர்வு காணொளி ஒன்று வெளியிடப்பட்டது. மேலும் இதுபோல முகம் தெரியாதவர்களை நம்பி பணம் முதலீடு செய்ய வேண்டாம் எனவும் எச்சரித்து உள்ளனர்.