பொதுமக்கள் ‘இதை’ செய்யாவிடில் அபராதம் விதிப்பு – சென்னை மாநகராட்சி அதிரடி!

0
பொதுமக்கள் 'இதை' செய்யாவிடில் அபராதம் விதிப்பு - சென்னை மாநகராட்சி அதிரடி!
பொதுமக்கள் 'இதை' செய்யாவிடில் அபராதம் விதிப்பு - சென்னை மாநகராட்சி அதிரடி!
பொதுமக்கள் ‘இதை’ செய்யாவிடில் அபராதம் விதிப்பு – சென்னை மாநகராட்சி அதிரடி!

சென்னையில் வசிக்கும் மக்கள் அனைவரும் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்காவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்திருக்கிறது. மேலும், இது குறித்த முழு விபரத்தை இந்த பதிவில் பார்ப்போம்.

அபராதம் வசூலிக்கப்படும்:

தமிழ்நாட்டில் அதிகமான மக்கள் தொகையுடன் மிக அதிக வருவாய் உடைய ஊர்களை மாநகராட்சிகளாக பிரித்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 21 மாநகராட்சிகள் இருக்கின்றன. இம் மாநகராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சென்னை முதலாவது மிகப்பெரிய மாநகராட்சி ஆகும். இந்த சென்னை மாநகரில் அதிகமான மக்கள் வெளி ஊரில் இருந்து இடம் பெயர்ந்து வசிக்கின்றனர். அதனால் இவர்கள் போடும் குப்பையால் சென்னை மாநகராட்சி அசுத்தமாக காணப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

இதனால், சென்னை மாநகராட்சி கமிஷனர் பராமரிப்பு நடவடிக்கை எடுக்கும் வகையில், ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அது சாலையில் குப்பை போட கூடாது, குப்பை தொட்டியில் மட்டும் போட வேண்டும் , வீட்டில் இருக்கும் குப்பைகளை காலையில் வரும் மாநகராட்சி குப்பை வண்டிகளில் மட்டுமே போட வேண்டும் மற்றும் வெளியே பொது இடங்களில் போட கூடாது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதற்காக அதிகாரிகளை நியமித்து குப்பை போடுபவர்களை, விதிகளை மீறுபவர்களை அரசு தீவிரமாக கவனித்து வருகிறது.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகும் நடிகை வினுஷா? புதிய அறிமுகம்! ரசிகர்கள் ஷாக்!

மேலும், மக்கும் குப்பை, மக்காத குப்பையை தரம் பிரித்து தான் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது. குப்பையை தரம் பிரித்து, தங்கள் வீட்டிற்கு வரும் துப்புரவு ஊழியர்களிடம், பொதுமக்கள் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், தரம் பிரிக்காமல் வழங்கினால், அபராதம் விதிக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், குப்பைகளை தரம் பிரிக்காமல் கொடுத்தால், தனிநபர் வீடுகளுக்கு ரூ.100 மற்றும் அடுக்குமாடி கட்டிடங்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!