விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகும் நடிகை வினுஷா? புதிய அறிமுகம்! ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து விலகும் நடிகை வினுஷா? புதிய அறிமுகம்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து விலகும் நடிகை வினுஷா? புதிய அறிமுகம்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகும் நடிகை வினுஷா? புதிய அறிமுகம்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடிகை வினுஷாவுக்கு பதிலாக பிரபல சின்னத்திரை நடிகை ஸ்ருதி ராஜ் அறிமுகமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியாகி கொண்டிருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா

சமீப காலமாக சற்று மந்தமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான ‘பாரதி கண்ணம்மா’ இப்போது முக்கியமான கட்டத்திற்கு வந்துள்ளது. இந்த சீரியலில் இதுவரை பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் உண்மையான கணவன் மனைவி என்றும் அவர்களின் விவாகரத்து பற்றிய அனைத்து உண்மைகளையும் லட்சுமி தெரிந்து கொள்ள அடுத்ததாக இந்த கதையில் என்ன திருப்பம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மருத்துவமனை, ஆப்ரேஷன், உடல் உறுப்பு தானம் என நகர்ந்த இந்த சீரியலின் கதைக்களம் ரசிகர்களுக்கு கொஞ்சம் வெறுப்பு தட்ட துவங்கியது.

TN Job “FB  Group” Join Now

இந்த நிலையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ஸ்வாரசியத்தை கூட்டும் விதமாக வெண்பாவின் அம்மாவாக ஷர்மிளா என்ற கதாப்பாத்திரமும், சௌந்தர்யாவின் நண்பராக விக்ரம் என்ற கதாபாத்திரமும் அறிமுகம் செய்யப்பட்டு கதை ஒரு போக்கில் பயணிக்கத் துவங்கி இருக்கிறது. இதற்கிடையில் புலி வருது என்று சொல்லும் கதையாக பாரதி, கண்ணம்மாவின் விவாகரத்து வழக்கு, கதையில் அவ்வப்போது எட்டி பார்க்கிறது. இந்த கதை இப்படியே சென்றால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு போரடித்து விடும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பிரபல சின்னத்திரை நடிகை ஸ்ருதி ராஜ் அறிமுகமாக இருப்பதாக சில தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது.

PM Kisan திட்ட பயனாளிகள் கவனத்திற்கு – ரூ.2000 வருவதில் சிக்கலா? புகார் தெரிவிப்பது எப்படி?

அதாவது, ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகை ஸ்ருதி ராஜ் அறிமுகமாக இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அந்த கதாப்பாத்திரம் எதுவென்ற உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்காத பட்சத்தில் ஸ்ருதி ராஜ் பாரதிக்கு தோழியாக வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருந்தால் பாரதி, கண்ணம்மா மீது கொண்டிருக்கும் வெறுப்புக்கு ஸ்ருதி ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று தெரிகிறது. எதுவாக இருந்தாலும் பாரதி விரைவில் DNA டெஸ்ட் எடுத்து கண்ணம்மாவுடன் ஒன்று சேர வேண்டும் என்பது மட்டும் தான் ரசிகர்களின் ஒரே விருப்பமாக இருந்து வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here