சென்னையில் ஜூலை 19 (நாளை) மின்தடை அறிவிப்பு – மின் வாரியம் தகவல்!

0
சென்னையில் ஜூலை 19 (நாளை) மின்தடை அறிவிப்பு - மின் வாரியம் தகவல்!
சென்னையில் ஜூலை 19 (நாளை) மின்தடை அறிவிப்பு - மின் வாரியம் தகவல்!
சென்னையில் ஜூலை 19 (நாளை) மின்தடை அறிவிப்பு – மின் வாரியம் தகவல்!

சென்னையில் நாளை(19.7.2022) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதன் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மக்களுக்கு தரமான மற்றும் தடையில்லா மின்சாரத்தை மலிவு விலையில் நுகர்வோருக்கு வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. நாட்டின் மின் உற்பத்தியை பெருக்குவதற்காக அனல், காற்றாலை, சூரிய ஒளி மூலம் மாநில,மத்திய மற்றும் தனியார் மின் உற்பத்தி திட்டங்கள் உடன் இணைந்து மின்சாரம் தயாரித்து வருகிறது. இதன் மூலம் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து கிராம புறங்களிலும் வீடு தோறும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

இத்தகைய மின் உற்பத்தி தயாரிக்க அனைத்து மாவட்டங்களிலும் ஒரு துணை மின் நிலையம் அமைக்கப்படும். இந்த துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். மேலும் பராமரிப்பு பணிகள் நடைபெறும் குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்படும். மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மின் வயர்களுக்கு இடையூறாக இருக்கும் மரங்கள், மரக்கிளைகள் அகற்றும் பணிகள், புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கும் பணிகள், புதிய இணைப்புகள் வழங்கும் பணிகள் போன்ற பணிகளில் மின் ஊழியர்கள் ஈடுபடுவார்கள். மின் ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபடும் போது அவர்களுக்கு எந்தவித இடையூறும், உயிர் சேதமோ ஏற்படாத வகையில் மின்தடை அறிவிக்கப்படுகிறது.

தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!

அந்த வகையில் சென்னையில் நாளை (19.7.2022) மின் வாரிய பராமரிப்பு பணிக்காக .தி.நகர், தாம்பரம், அடையாறு ஆகிய துணை மின் நிலையங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தி.நகரில் உஸ்மான் ரோடு, பசூல்லா சாலை, பார்த்தசாரதி புரம், காந்தி தெரு, ஜவகர்வால் நேரு, மாம்பலம் நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் சாலை, ரயில்வே பார்டர் ரோடு மற்றும் ஸ்டேஷன் வியூ ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளும், அடையாறில், வேளச்சேரி மகேந்திரா ஷோரூம், ராதா பிளாட், பிரசாந் மருத்துவமனை, வேளச்சேரி மெயின் ரோடு கந்தசாவை சோழமண்டலம், பம்மல் நல்லதம்பி தெரு, உதயம் நகர், தந்தை பெரியார் தெரு, முத்துமாரியம்மன் கோவில் தெரு, பாரதி நகர் முழுவதும், தாம்பரத்தில்,பெரும்பாக்கம் கைலாஷ் நகர், ஸ்ரீபெருமாள் நகர், பஜனை கோயில் தெரு, நூகம்பலயம் மெயின் ரோடு ஆகிய இடங்களில் நாளை (19.7.2022) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!