Disney+ Hotstar சந்தாவில் புதிய மாற்றம் – செப்.1 முதல் அமல்!

0
Disney+ Hotstar சந்தாவில் புதிய மாற்றம் - செப்.1 முதல் அமல்!
Disney+ Hotstar சந்தாவில் புதிய மாற்றம் - செப்.1 முதல் அமல்!
Disney+ Hotstar சந்தாவில் புதிய மாற்றம் – செப்.1 முதல் அமல்!

மக்களின் சிறந்த பொழுதுபோக்கு தலமாக திகழும் Disney+ Hotstar சேவைக்கான சந்தாவில் ஏற்கனவே பல புதிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சந்தா மாற்றம்

வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் பொழுதுபோக்கு அம்சங்கள் எல்லாம் கையடக்க ஸ்மார்ட் போன்களுக்குள் வந்துவிட்டது. அதாவது அமேசான், நெட்பிலிக்ஸ், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட OTT தலங்கள் மூலம், மக்கள் பொழுதுபோக்கு தொடர்பிலான சேவைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் முன்னணி இடத்தை வகித்திருக்கும் Disney+ Hotstar செயலியின் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு 2 விதமான சந்தாக்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை – தங்கர்பச்சான் கோரிக்கை!

இந்த சேவைகள் தற்போது சில புதிய திருத்தங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது VIP மற்றும் பிரீமியம் சந்தாக்கள் இரண்டும் வரும் செப்டம்பர் மாதம் முதல் நிறுத்தப்பட உள்ளது. இதுவரை பயனர்கள் VIP சந்தாவுக்கு ரூ.399 மற்றும் பிரீமியர் சந்தாவுக்கு ரூ.1,499 என ஆண்டு தோறும் கட்டணம் செலுத்த வேண்டும். இப்போது இந்த சந்தாக்கள் விரிவாக்கப்பட்டுள்ளன. அதன் படி Disney+ Hotstar சேவைகளின் மொபைல் பதிப்புக்கு ரூ.499, (VIP திட்டத்தை விட இதில் ரூ.100 அதிகம்) Disney+ Hotstar சூப்பர் சேவைக்கு ரூ.899 மற்றும் பிரீமியம் சேவைக்கு ரூ.1499 போன்ற கட்டணங்களை செலுத்த வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

இதில் பிரீமியம் பயனர்கள் வழக்கம் போல 4 சாதனங்களில் ஹாட்ஸ்டார் சேவைகளை 4K வீடியோ தரத்துடன் அனுபவிக்க முடியும். சூப்பர் பயனர்கள் 2 சாதனங்களுக்கான அணுகலுடன் HD வீடியோ தரத்தை பெற்றுக்கொள்ள முடியும். மேலும் ஹாட்ஸ்டாரின் அடிப்படை திட்டத்தை மொபைல் சாதனத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த சேவைகள் அனைத்தும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்த VIP திட்டம் நிறுத்தப்பட்ட பிறகு ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் மற்றும் பிராட்பேண்ட் திட்டங்களுக்கான சந்தா திருத்தியமைக்கப்படலாம் என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!