தமிழகத்தில் 6.89% வளர்ச்சியுடன் விவசாயத்துறை முதலிடம் – மத்திய அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டாலும், தென்னிந்தியாவின் வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பது ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது.
வளர்ச்சி விகிதம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சி அடைந்தது. இந்நிலையில் ஒன்றிய அரசின் புள்ளியில் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் சார்பில், தென்னிந்திய மாநிலங்களின் மொத்த வளர்ச்சி மற்றும் துறைவாரியான வளர்ச்சி விகிதங்கள் பற்றிய புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து மைனஸ் 7.3 விழுக்காடாக குறைந்துள்ளது.
Disney+ Hotstar சந்தாவில் புதிய மாற்றம் – செப்.1 முதல் அமல்!
கொரோனா பரவல் காரணமாக தென்னிந்திய மாநிலங்களின் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. இருந்த போதிலும் மற்ற மாநிலங்களின் வளர்ச்சி விகிதம் மைனஸில் உள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் வளர்ச்சி விகிதம் நேர்மறையாக உள்ளது. 2020-21 நிதியாண்டில் தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 2 சதவிகிதம் என கணக்கிடப்பட்ட நிலையில் தற்போது 1.42 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
TN Job “FB
Group” Join Now
ஆந்திராவில் மைனஸ் 2.58 சதவீதமும், கர்நாடகத்தில் மைனஸ் 2.62 சதவீதமும், புதுச்சேரியில் மைனஸ் 3.46 சதவீதமும், தெலுங்கானாவில் மைனஸ் 0.62 விழுக்காடு வளர்ச்சி விகிதம் உள்ளது. கடந்த ஓராண்டாக கொரோனா காலகட்டம் என்பதால் தமிழகத்தில் பிரதான துறைகளில் 6.89 சதவிகித வளர்ச்சி உள்ளது. அதில் விவசாயதுறை முதல் இடத்திலும், விவசாயம் சார்ந்த பணிகள், கால்நடை வளர்ப்பு, மீன்வளம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மேலும் நிதி சார்ந்த சேவைகள் 10.83 சதவீதம் வளர்ச்சி அடைந்திருக்கின்றன. ஆனால் மின்சாரம், வணிகம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சி எதிர்மறையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.