உங்கள் ஆதார் கார்டில் இது சரியா இருக்கா.. Check பண்ணிட்டு உடனே மாத்துங்க – இல்லனா ரிஸ்க் தான்!

0
உங்கள் ஆதார் கார்டில் இது சரியா இருக்கா.. Check பண்ணிட்டு உடனே மாத்துங்க - இல்லனா ரிஸ்க் தான்!
உங்கள் ஆதார் கார்டில் இது சரியா இருக்கா.. Check பண்ணிட்டு உடனே மாத்துங்க - இல்லனா ரிஸ்க் தான்!
உங்கள் ஆதார் கார்டில் இது சரியா இருக்கா.. Check பண்ணிட்டு உடனே மாத்துங்க – இல்லனா ரிஸ்க் தான்!

ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை மாற்றிக் கொள்வதற்கான அனுமதியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கியுள்ள நிலையில், இவற்றை ஆன்லைனில் எளிமையாக எவ்வாறு செய்யலாம் என்பதை இப்பதிவின் மூலம் அறியலாம்.

ஆன்லைன் வழிமுறை:

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனிப்பட்ட 12 இலக்க எண்களுடன் கூடிய ஆதார் அடையாள அட்டையை வழங்கியுள்ளது. இதில், தனிப்பட்ட நபரின் அனைத்து பயோ மெட்ரிக் தகவல்கள் முதல் முகவரி வரை பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தனிநபரின் தொலைபேசி எண்களை அடிப்படையாக வைத்து தான் செய்யப்படுகிறது. நாம் ஆதாரில் பதிவு செய்யப்பட்டுள்ள தொலைபேசி எண்களுக்கு வரும் otp எண்களை வைத்து தான் எந்த ஒரு மாற்றமும் செய்ய முடியும்.

Follow our Instagram for more Latest Updates

ஆனால், பதிவு செய்யப்பட்டுள்ள தொலைபேசி எண்களை நாம் மாற்றும் போது அவற்றை முறையாக மாற்றிக் கொள்ள வேண்டும். இதை செய்ய தவறும் பட்சத்தில் நமது அடுத்த கட்ட மாற்றங்களை செய்ய முடியாமல் தவிக்க நேரிடும். நமது ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு வழியா இந்த உண்மை தெரிஞ்சுருச்சு.. இனி ஓவர்.. பாரதி கண்ணாமாவுக்கு சுபம் போட்ட விஜய் டிவி!!

Exams Daily Mobile App Download
ஆன்லைனில் ஆதார் தொலைபேசி எண்களை மாற்றும் வழிமுறை:
  • இதற்கு https://ask.uidai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில், மொபைல் எண் மற்றும் captcha வை பதிவிட்டு கிடைக்கும் otp ஐ உள்ளிட்டு ஆதார் அப்டேட் பகுதிக்கு செல்ல வேண்டும்.
  • இங்கு, உங்களின் மாற்றம் செய்யப்பட வேண்டிய விவரங்களின் பட்டியல் இருக்கும்.
  • இப்பொழுது, what do you want to update என்ற கட்டத்தில், மொபைல் நம்பர் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • அடுத்ததாக, மொபைல் எண் மற்றும் captcha வை பதிவு செய்து, otp உள்ளிட்டு Save and Proceed என்று கொடுத்து, உங்களுக்கான ஆதார் மையத்தின் நேரத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
  • குறிப்பிட்டுள்ள நேரத்தில், அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு சென்று இந்த செயல்முறையை முடித்துக் கொள்ள வேண்டும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!