ஆதார் அட்டை செல்லாமல் போக வாய்ப்பு? சரிபார்ப்பது எப்படி! முழு விவரங்கள் இதோ!

0
ஆதார் அட்டை செல்லாமல் போக வாய்ப்பு? சரிபார்ப்பது எப்படி! முழு விவரங்கள் இதோ!
ஆதார் அட்டை செல்லாமல் போக வாய்ப்பு? சரிபார்ப்பது எப்படி! முழு விவரங்கள் இதோ!
ஆதார் அட்டை செல்லாமல் போக வாய்ப்பு? சரிபார்ப்பது எப்படி! முழு விவரங்கள் இதோ!

இந்தியாவில் முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதார் அட்டை வைத்து பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நம்பகமற்ற ஆதார் கார்டுகள் செயலிழக்கபட்டு வருகிறது. அதனால் உங்கள் ஆதாரை வெரிஃபை (Verify) செய்து வைத்து கொள்வது நல்லது.

ஆதார் அட்டை

இந்தியாவில் பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. நமது நாட்டில் ஆதார் கார்டு தனி நபரின் அடையாளமாக ஆவணமாக விளங்குகிறது. இதில் தனிப்பட்ட நபர்களின் பயோமெட்ரிக் டேட்டா, டெமோகிராபிக் தகவல்கள் இடம் பெற்றிருக்கும். மேலும் இந்த ஆதார் தனிப்பட்ட வேலைகளுக்கும், அலுவலகம் சார்ந்த வேலைகளுக்கும் கேட்கப்படுகிறது. அதே போல மத்திய மாநில அரசின் சலுகைகளை பெறுவதற்கும் ஆதார் தேவைப்படுகிறது. இத்தகைய பயன்பாடு உடைய ஆதாரை நாம் எப்போதும் அப்டேட்டாக வைத்திருப்பது அவசியமாகும்.

Exams Daily Mobile App Download

இந்த ஆதார் அட்டையை ரேஷன் கார்டு, பான் கார்டு, வங்கிக்கணக்குகள் ஆகியவற்றுடன் இணைந்திருக்க வேண்டியது தற்போது அவசியமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு பொது மக்களுக்கு அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஒரு நபரின் ஆதார் அட்டை என்பது அவர் உயிரோடு இருக்கும் போது மட்டுமின்றி அவர் இறந்துவிட்டாலும் இறப்பு சான்றிதழ் உள்ளிட்டவற்றை பெறுவதற்கும் ஆதார் அட்டை தேவைப்படும். இந்த நிலையில் ஆதார் அட்டையில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது. அதனால் அரசு ஆதார் கார்டு தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

ரயில்வேயில் 10வது படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – 1000+ காலிப்பணியிடங்கள்! முழு விவரம் உள்ளே!

தற்போது ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆதார் அட்டைகளை வைத்திருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் அவை கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு வேளை உங்கள் ஆதார் கார்டு செயலிழந்து இருந்தால் நீங்கள் அது பற்றி அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இணையதளத்திற்கு சென்று ‘ஆதார் சர்வீஸ்’ என்ற பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் உள்ள Verify Aadhaar என்பதை கிளிக் செய்து உங்களது 12 இலக்க ஆதார் எண்ணை குறிப்பிடவும். அதன்பின் செக்யூரிட்டி கோட் எண்ணை குறிப்பிட்டு ‘Submit’ கொடுத்தால் உங்கள் ஆதார் அட்டை நிலை தெரிந்து விடும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!