மக்களே கவனம்…தமிழகத்தில் 27ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் வெளியிட்ட தகவல்!

0
மக்களே கவனம்...தமிழகத்தில் 27ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் வெளியிட்ட தகவல்!
மக்களே கவனம்...தமிழகத்தில் 27ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் வெளியிட்ட தகவல்!
மக்களே கவனம்…தமிழகத்தில் 27ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் வெளியிட்ட தகவல்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து, மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக மேலும் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌ என வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வானிலை தகவல்‌

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 27ம் தேதி வரை ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌ என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் மீன்வர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என அறிவித்துள்ளது. அத்துடன் மேலும் இன்றைய வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள தகவல்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, 23.09.2022: மேற்கு தொடர்ச்‌சி மலை மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மாவட்டங்கள்‌, தமிழக கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌.

24.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌.

25.09.2022 முதல்‌ 27.09.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌.

வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு.. தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரம் உள்ளே!

Exams Daily Mobile App Download

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 24 மணி நேரத்துற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!