மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் & அகவிலைப்படி உயர்வு – வெளியான சூப்பர் அறிவிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் & அகவிலைப்படி உயர்வு - வெளியான சூப்பர் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் & அகவிலைப்படி உயர்வு - வெளியான சூப்பர் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் & அகவிலைப்படி உயர்வு – வெளியான சூப்பர் அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா தாக்கம் காரணமாக சம்பள உயர்வு, அகவிலைப்படி உயர்வு,வீட்டு வாடகை படி உயர்வு ஆகிய அறிவிப்புகள் நிறுத்தப்பட்டு இருந்தது. இருப்பினும் தற்போது ஹோலி பண்டிகைக்கு முன் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல் வந்துள்ளது.

சூப்பர் அறிவிப்பு:

மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளமும், அகவிலைப்படியும் உயர்த்தப்படும் என்று ஊழியர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த வகையில் வருடம் தோறும் ஜனவரி, ஜூன் மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதமே அகவிலைப்படி உயர்வு மற்றும் அடிப்படை சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் இந்த அறிவிப்புகள் வெளியாகவில்லை.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு – கோரிக்கை முன்வைப்பு!

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அனைத்து நிறுவனங்களும் முடக்கப்பட்டது. இதனால் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியது. இந்த வகையில் அதிகப்படியான நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனால் தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு மற்றும் அடிப்படை சம்பள உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் குடியரசு தினத்திற்கு முன்பாக அகவிலைப்படி உயர்வு பற்றி அறிவிப்பு வரும் என ஊழியர்கள் எதிர்பார்த்தன. இருப்பினும் இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் அரசு ஊழியர்கள் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ரூ.200க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள்!

இந்நிலையில் அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பை அரசு வரும் ஹோலி பண்டிகைக்கு முன்பாக வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் சற்று கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், அரசுக்கு பணவீக்கம் குறைந்து வருவதால், விரைவில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக அரசு ஊழியர்கள் கூறுகின்றனர். அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு உயர்த்தப்பட்டால், அகவிலைப்படி 34% ஆக உயரும். இதனால் சுமார் 50 லட்சத்துக்கு மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், 60 லட்சத்துக்கு மேற்பட்ட பென்சனர்களும் பயன் அடைவார்கள் என குறிப்பிட்டுள்ளார். இதன் தொடர்ந்து வீட்டு வாடகை படி மற்றும் அடிப்படை சம்பளத்தை உயர்த்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here