கல்லூரி மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
கல்லூரி மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
கல்லூரி மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
கல்லூரி மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவில் மத்திய அரசு பல்வேறு வகையான கல்வி உதவித்தொகைகளை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்து இப்பதிவில் காண்போம்.

கல்வி உதவித்தொகை:

இந்தியாவில் பழங்குடியினர், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், பட்டியல் இனத்தவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் போன்றோர்க்கு அரசு சார்பாக கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகையை பெற விரும்பும் மாணவர்கள் அரசு வழிகாட்டுதலின் படி பள்ளிகள் வாயிலாகவும் அல்லது இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். தற்போது 2022 – 2023 ம் கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகை குறித்த அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில் உயர்கல்வி சேர்ந்த மாணவர்கள் ஒன்றிய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகிறது.

இது குறித்து தமிழக உயர்கல்வித்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்த ஆண்டு உயர்கல்வி பயிலும் மாணவர்கள் மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற www.scholarships.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் அக்டோபர் 31ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மத்திய மாநில அரசுகள் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

செப்டம்பர் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – RBI அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

அதாவது வீட்டில் முதல் பட்டதாரிக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்தகைய திட்டங்கள் மூலம் மாணவர்கள் ஊக்கம் பெற்று இடை நிற்றல் இல்லாமல் கல்வியை தொடர்கின்றனர். அதன் தொடர்ச்சியாக தற்போது திறன் அடிப்படையிலும் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் திறன் அடிப்படையில் வழங்கும் உதவித்தொகை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் நேரடியாக மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!