செப்டம்பர் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – RBI அறிவிப்பு!

0
செப்டம்பர் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - RBI அறிவிப்பு!
செப்டம்பர் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - RBI அறிவிப்பு!
செப்டம்பர் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – RBI அறிவிப்பு!

விநாயகர் சதுர்த்தி, ஓணம் பண்டிகை போன்ற பண்டிகை தினம் வருவதால் செப்டம்பர் மாதத்தில் மட்டுமே 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுமுறை தினங்களின் பட்டியலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை:

இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் இயங்கி வருகின்றன. மேலும், ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்கிற அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி தான் வழங்கி வருகிறது. பொதுவாகவே வங்கிகளுக்கு வார இறுதி நாட்கள் அதாவது இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை மற்றும் பண்டிகை நாட்களில் விடுமுறை விடப்படுகிறது. ஆனால், இந்த ரிசர்வ் வங்கி அறிவிக்கும் விடுமுறை நாட்கள் அனைத்து வங்கிகளுக்கும் பொருந்துவதில்லை.

Exams Daily Mobile App Download

எந்தெந்த மாநிலங்களில் அந்த பண்டிகை கொண்டப்படுகிறதோ அந்த மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால், வங்கிகளுக்கு செல்ல திட்டமிடும் போது உங்களது மாநிலத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா என்பதை தெளிவுபடுத்திய பிறகு வங்கிகளுக்கு செல்லமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் மாதத்தில் வார இறுதி நாட்களையும் சேர்த்து 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது எந்தெந்த மாநிலத்திற்கு எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பதை பார்க்கலாம்,

செப்டம்பர் 1– விநாயகர் சதுர்த்தி(இரண்டாம் நாள்) காரணமாக கோவாவின் பனாஜியில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.

செப்டம்பர் 4 – ஞாயிறு விடுமுறை

செப்டம்பர் 6 – கர்ம பூஜை காரணமாக ஜார்கண்டில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

செப்டம்பர் 7 மற்றும் 8 – ஓணம் பண்டிகை காரணமாக திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.

TNPSC Group 2 & 2A தேர்வு முடிவுகள் வெளியீட்டில் இழுபறி – தேர்வர்கள் கவலை!

செப்டம்பர் 9 – இந்திரஜாதா காரணமாக சிக்கிம் மாநிலம் காங்டாக்கில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.

செப்டம்பர் 10 – ஸ்ரீ நரவனே குரு ஜெயந்தியை முன்னிட்டு திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.

செப்டம்பர் 11 – ஞாயிறு விடுமுறை

செப்டம்பர் 18 – ஞாயிறு விடுமுறை

செப்டம்பர் 21 – ஸ்ரீ நாராயண குரு சமாதி தினத்தையொட்டி திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.

செப்டம்பர் 24 – நான்காவது சனிக்கிழமை

செப்டம்பர் 25 – ஞாயிறு விடுமுறை

செப்டம்பர் 26 – நவராத்திரி விழாவையொட்டி மணிப்பூரில் உள்ள ஜெய்ப்பூர் மற்றும் இம்பாலில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!